அறுபடைவீடு பாதயாத்திரை
5ஆம் நாள் வைகாசி 29 (12.06.2017) திங்கள் கிழமை
இன்று வைகாசி 29 (12.06.2017) திங்கள் கிழமை அதிகாலை மணி 3:45 க்கு அழகர் கோயிலில் இருந்து புறப்பட்டு கள்ளந்திரி கடச்சனேந்தல் வழியாக மதுரை சர்வேயர்காலனி வந்து சேர்ந்தோம்.
மதுரையின் எல்லையில் நுழையும் போது பரமக்குடியைச் சேர்ந்த அடியார் ஒருவர் சாலையோரம் காத்திருந்து குருசாமி அவர்களை வணங்கி ஆசிபெற்றார். இவர் பரமக்குடி காசிஸ்ரீ கந்தசாமி அவர்களின் நண்பர் ஆவார்.
ஐயா கம்பனடிப்பொடி சா.கணேசன் அவர்களது பேரன் திரு.கம்பராமன் அவர்கள் வழியில் நின்று குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் மற்றும் அடியார்களையும் வரவேற்றார்.
திரு செ. முருகப்பன் அவர்களது வீட்டும், திரு கம்பராமன் அவர்களது வீடும் அருகருகே உள்ளன. திரு செ. முருகப்பன் செட்டியார் அவர்கள் அவரது இல்லத்திற்கு யாத்திரிகர்களை வரவேற்றார். நாட்டுக்கோட்டை நகரத்தார் பலரும் வந்திருந்து யாத்திரிகர்களை வரவேற்றனர். குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் நல்லாசி பெற்றனர். இவரது இல்லத்தில் அனைவருக்கும் ரொட்டியும் தேநீரும் வழங்கி உபசரித்தார். சிறிதுநேரம் சென்றபின்னர் திரு.கம்பராமன் அவரது இல்லத்திற்குச் சென்றோம்.
காலை உணவு - திரு கம்பராமன் அவர்கள் யாத்திரிகர்களை வரவேற்று காலை உணவு வழங்கி மகிழ்ந்தார்.
கடுமையான வெயில். சர்வேயர்காலணியில் இருந்து புறப்பட்டு காலை மணி 10:15 அளவில் மதுரை வடக்குக் கோபுரம் எதிரே உள்ள நகரத்தார் விடுதியை அடைந்தோம். நகரத்தார் பலரும் குடும்பம் குடும்பமாக வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசிபெற்றுச் சென்றனர்.
குருசாமி அவர்களின் அனுமதி பெற்று, யாத்திரிகர்களில் நாங்கள் மூவர் மட்டும், மதியம் உச்சிகாலத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வடக்குக் கோபுரம் வழியாகச் சென்று வழிபாடு செய்தோம். தீப ஆராதனை அனைத்திலும் அற்புதமான அருட்காட்சி அளித்து அம்மையும் அப்பனும் எங்களை ஆட்கொண்டனர். கோயிலில் எங்களுக்கு குங்குமம் விபூதி தயிர்சாதம் எனப் பிரசாதம் கொடுத்துச் சிறப்புச் செய்தனர்.
மதிய உணவு - மதுரை சர்வேயர்காலனி திரு செ.முருகப்பன் செட்டியார் அவர்கள் அவரது வீட்டில் யாத்திரிகர்களுக்கு இன்று காலைஉணவு வழங்க விருப்பம் தெரிவித்து இருந்தார். இதேபோல் திரு.கம்பராமன் அவர்களும் அவரது வீட்டில் இன்று காலை உணவு வழங்க விருப்பம் தெரிவித்து இருந்தார். இருவரும் விருப்பம் தெரிவித்து இருந்த காரணத்தினால், காலைஉணவு திரு.கம்பராமன் அவர்களது வீட்டில் என்றும், மதியஉணவு நகரத்தார்விடுதியில் செ.முருகப்பன் அவர்கள் வழங்குவது என்றும் முடிவு செய்தனர். அதன்படி யாத்திரிகர்களுக்கு இன்றைய மதியஉணவை திரு.செ.முருகப்பன் அவர்கள், நகரத்தார் விடுதியில் வைத்து வழங்கி மகிழ்ந்தார்.
ஓய்வு.
https://goo.gl/maps/w3VqoUxx7DFLQqVN6
இன்றைய நாள் பயணம் சுமார் 21 கி.மீ.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக