வட்டவட்ட வளையங்களைக் கொண்ட பாறை
எப்போதும் வென்றான் அருள்மிகு உஜ்ஜினி மாகாளியம்மன் கோயிலை அடுத்து அருள்மிகு சோலைசாமி கோயிலுக்குச் செல்லும் வழியில் கல்லினால் ஆன செக்குகள் பயனற்றுக் கிடக்கின்றன. இந்தச் செக்குகள் சுமார் 6அடி ஆழத்திற்குமேல் புதைக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவற்றை அப்புறப்படுத்த முடியாமல் அப்படியே கிடக்கின்றன. இதைப் பயன்படுத்திய வணிகர் குடும்பங்களும் இதைப் பராமரிக்க முடியாமல் அப்படியே விட்டுவைத்துள்ளனர்.
ஒரு மரக்கிளையைக் குறுக்கா வெட்டிப் பார்த்தால், அதில் வளையம் வளையமாகத் தெரியும், எத்தனை வளையங்கள் உள்ளன என்பதைக் கொண்டு அந்த மரத்தின் வயதைக் கணக்கிட்டுச் சொல்கின்றனர். கிரானைட் பாறையால் ஆன இந்தக் கல் செக்கில், மரத்தில் உள்ள வளையங்கள் போன்று வளையங்கள் இருந்தன. (Liesegang rings observed in Lakha Red Granite Stone ?)
சிகப்பு கிரானைட் கல்லில் இதுபோன்ற வளையங்கள் எப்படி உண்டாகியிருக்கும்?
இந்தக் கல்லில் உள்ள வளையங்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சிரியமாக இருந்தது எனக்கு.
மேலேயுள்ள கிரானைட் பாறையில் உள்ள வளையங்களைப் போன்று பல வட்டவட்ட வளையங்களைக் கொண்ட பொக்குப்பாறை ஒன்று சாலையோரம் கிடந்தது. அதன் படத்தைக் கீழே இணைத்துள்ளேன்.
(Liesegang rings observed in sedimentary rocks made of Tsunami clay ?)
இந்தக் கல்லானது இறுகிப் பாறையாக மாறுவதற்கு முன்பு பாறைக்குழம்பாக இருக்கும்போதே, வட்டமான வளையாங்களைக் கொண்ட ஏதோ ஒன்று இருந்திருக்கிறது. அதன்மேல் பாறைக்குழம்பு படிந்து இறுகிக் கிரானைட் பாறையாக மாறியுள்ளது. இந்த வட்டவடிப் பொருளானது ஒரு தாவரத்தின் படிமமாக இருக்குமோ? என்ற ஐயம் எனக்கு. (An Aztec sandstone with Liesegang rings ?)
புவியிலாளர்கள் யாரேனும் இந்தக் கற்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து சொன்னால் நல்லது.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக