அறுபடைவீடு பாதயாத்திரை - 60 நாட்கள் - 1126 கி.மீ. பயணம்.
இன்று 7ஆம் நாள், வைகாசி 31 (14.06.2017) புதன் கிழமை.
காலை மணி 5:15 க்கு திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தோம்.
கோயில் நுழைவாயில் மண்டத்தில் வலமிருந்து இடமாக அருள்மிகு 1) சத்தியகிரீஸ்வரர், 2) கற்பக விநாயகர், 3) துர்கை 4) நாரதர் தேவசேனை உடனாய முருகப்பெருமானைக் கண்டு வணங்கிக் கொண்டோம். உள்ளே குடவரையில் அருள்மிகு முருகப்பெருமானுக்கு இடப்புறம் 5) பெருமாள் சிவலிங்கத்தைப் பார்த்தபடி இருக்கிறார். ஆனால் என்ன காரணத்தினாலோ இந்தச் சிற்பத்தில் பெருமாள் இடம்பெறவில்லை. இதற்கான காரணம் என்னவென்றும் தெரியவில்லை.
மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணக்காட்சி சிற்பத்தைக் கண்டு வணங்கிக்கொண்டோம்.
தேவர் தலைவனான இந்திரன் தனது மகள் தேவசேனையை அருள்மிகு முருகப்பெருமானுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் சிற்பத்தைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.
கோயில் மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும் அருள்மிகு கருப்பணசாமியை வணங்கிக்கொண்டு கோயிலின் உள்ளே சென்றோம். எல்லாக் கோயில்களிலும் நுழைவாயில்களின் முன்பு இடதுபக்கம் பிள்ளையார் இருப்பார். ஆனால் திருப்பரங்குன்றத்தில் வலதுபக்கம் பிள்ளையார் இருப்பார். திருப்பரங்குன்றம் கோயில் வடக்குப் பார்த்த சந்நிதி.
குடவரையில் ஐந்து சந்நிதிகள் அருள்மிகு 1) சத்தியகிரீஸ்வரர், 2) கற்பக விநாயகர், 3) துர்கை 4) நாரதர் தேவசேனை உடனாய முருகன் 5) பெருமாள் சந்திகளில் அடுத்தடுத்துத் தீபம் பார்த்து வழிபாடு செய்து கொண்டோம்.
அற்புதமான வழிபாடு.
அருள்மிகு முருகப்பெருமான் திருவருளால் அறுபடைவீட்டில் 6ஆவது படைவீடான பழமுதிர்சோலையில் வழிபாடு முடித்து, இன்றைய தினம் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் வழிபாடு நிறைவு பெற்றது. கோயில் வாயிலில் யாத்திரிகர் அனைவரும் நின்று படம் எடுத்துக் கொண்டோம்.
கோயிலில் இருந்து நகரத்தார் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். இங்கே உள்ள அருள்மிகு மரகதவிநாயகருக்குப் பூசை செய்திட அர்ச்சகர் வந்திருந்தார். யாத்திரிகர் அனைவரும் அருள்மிகு மரகதவிநாயகர் வழிபாட்டில் கலந்துகொண்டோம்.
இந்த மரகதவிநாயகர் தெப்பக்குளத்தின் மேற்குக் கரையில் உள்ளார். இந்தத் தெப்பத்தில் இப்போது தண்ணீர் இல்லை. முன்பெல்லாம் இதில்தான் தெப்பத் திருவிழா விமர்சையாக நடைபெறும்.
காலை உணவு.
ஓய்வு,
குருசாமி பச்சைக்காடி அவர்கள் வந்திருப்பதை அறிந்த அன்பர்கள் சிலர் வந்திருந்து குருசாமியிடம் ஆசிபெற்றுச் சென்றனர்.
சிலர் குருசாமி அவர்களின் அனுமதி பெற்று மலையைச் சுற்றி வந்தனர். சிலர் தங்களது உடைகளைத் துவைத்து உலர்த்தி மடித்து எடுத்து வைத்துக் கொண்டனர்.
மதிய உணவு.
ஓய்வு.
மாலை நேரம் ரொட்டியும் தேநீரும் .
இரவு சுமார் 7.15 மணி அளவில் குருசாமி அவர்கள் வழிபாடு செய்தார்கள். விநாயகர்அகவலும், பெருமாள் போற்றியம் பாராயணம் செய்யப்பற்றன.
வழிபாடு முடிந்தவுடன் இரவு உணவு.
ஓய்வு.
ஓய்வு,
குருசாமி பச்சைக்காடி அவர்கள் வந்திருப்பதை அறிந்த அன்பர்கள் சிலர் வந்திருந்து குருசாமியிடம் ஆசிபெற்றுச் சென்றனர்.
சிலர் குருசாமி அவர்களின் அனுமதி பெற்று மலையைச் சுற்றி வந்தனர். சிலர் தங்களது உடைகளைத் துவைத்து உலர்த்தி மடித்து எடுத்து வைத்துக் கொண்டனர்.
மதிய உணவு.
ஓய்வு.
மாலை நேரம் ரொட்டியும் தேநீரும் .
இரவு சுமார் 7.15 மணி அளவில் குருசாமி அவர்கள் வழிபாடு செய்தார்கள். விநாயகர்அகவலும், பெருமாள் போற்றியம் பாராயணம் செய்யப்பற்றன.
வழிபாடு முடிந்தவுடன் இரவு உணவு.
ஓய்வு.
காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு முருகப்பெருமான் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,
குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக