செவ்வாய், 16 ஜூன், 2020

17.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, 10ஆம் நாள் பயணம் - ஆனி 3

அறுபடைவீடு பாதயாத்திரை 
60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று 10ஆம் நாள் - ஆனி 3 (17.06.2017) சனிக் கிழமை.
கல்குறிச்சியில் இருந்து அதிகாலை 3.00 மணிக்கு தினவழிபாடு செய்தோம்.  ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அருப்புக்கோட்டை புறவழிச்சாலை வழியாகப் பந்தல்குடி புறவழிச்சாலையில் உள்ள அருள்மிகு ஐயப்பன் கோயிலை 9.00 மணிக்கு வந்து அடைந்தோம்.




அருப்புக்கோட்டை புறவழிச்சாலை வழியாகச் சென்றோம்.  காலை மணி 7.00 அளவில் ஊரின் தெற்கு எல்லையில் சாலையோரம் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம். 



செட்டிக்குறிச்சி, செட்டிப்பட்டி விலக்குப்பாதைகளைக் கடந்து, சாலையோரம் உள்ள சேதுராஜபுரம் ஊராட்சி ஒன்றித் தொடக்கப்பள்ளி வளாகத்தில் வந்து சிறிது நேரம் தங்கியிருந்தோம்.




பந்தல்குடி அடியார் ஒருவர் இங்கே வந்து யாத்திரிகர்களை வரவேற்றார்.  காலை 9.00 மணி அளவில், அவருடன் சேர்ந்து  பள்ளிக்கூட வளாகத்தில் அனைவரும் காலை உணவு சாப்பிட்டோம்.

உணவு உண்டு முடித்தவுடன் அங்கிருந்து புறப்பட்டு பந்தல்குடி அருள்மிகு ஸ்ரீ ஆனந்த ஐயப்பன் ஆலயம் சென்று சேர்ந்தோம்.   ஆலயத்தின் கீழ்ப்பகுதியில் தங்கினோம்.



யாத்திரிகர் சென்னை கந்தசாமி (வயது 28) அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அதனால் லட்டு பாயாசம் இனிப்புடன் இன்றைய மதியவுணவு.  அனைரும் திரு கந்தசாமி அவர்களை ஆசிர்வதித்தனர். 

ஓய்வு .

பந்தல்குடி அருள்மிகு ஸ்ரீ ஆனந்த ஐயப்பன் ஆலயம் குடமுழுக்கு நடைபெற்று இரண்டு தினங்களே ஆகியிருந்த காரணத்தினால் அன்றைய இரவு வழிபாடு குருசாமி பச்சைக்காவடி அவர்களது தலைமையில் நடைபெற்றது.  ஊர்மக்கள் பெரிதும் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பனை அனைவரும் வணங்கிடலாம்.  ஆனால் அவன் நித்திய பிரம்மச்சாரி என்பதால் பெண்கள் மட்டும் 18படி ஏறி ஸ்ரீ ஐயப்பனை வழிபடும் முறை இல்லை என்று ஸ்ரீ ஐயப்பன் அடியார் ஒருவர் விளக்கம் அளித்துப் பேசினார்.

வழிபாடு முடிந்தபின்னர் இரவு உணவு.
ஓய்வு.
 
கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.

https://goo.gl/maps/yEUW4P1AYwab5sWy9
இன்றைய பயணம் சுமார் ....23 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக