ஞாயிறு, 21 ஜூன், 2020

22.06.2014 காசி பாதயாத்திரை - 28ஆம் நாள் - ஆனி 8

பயணக் கட்டுரை - காசி பாதயாத்திரை - 
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்

இன்று 28ஆம் நாள் - ஆனி 8 (22.06.2014) ஞாயிற்றுக் கிழமை.

காவேரிபட்டிணத்திலிருந்து அதிகாலை 2.45 மணிக்கு புறப்படத் தயாரானோம்.  ஆனால்  மின்சாரம் தடைபட்டது. அதனால் எங்களது பயணமும் தடைபட்டது. மின்சாரம் வந்த பின்பு காலை மணி 4.10க்கு வழக்கம்போல் தினசரிவழிபாட்டை முடித்துக்கொண்டு ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டோம்.

6.10 am
6.10 am

6.11 am
6.00 மணிக்கு அவதானப்பட்டி அருள்மிகு மாரியம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.  கோயிலில் தீபம் காட்டி பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. இது ஒரு மனநெகிழ்ச்சியான அனுபவம்.  இதுபற்றித் தனியாக எழுதுகிறேன்.

6.11am

6.56 am
கிருஷ்ணகிரி செல்லும் வழியில், சாலையோரம் காலை மணி 6.50க்கு ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.

7.17 am
காலை 7.20 மணிக்கு கிருஷ்ணனகிரி ஐயப்பன் கோயில் வந்து அடைந்தோம். கோயில் வளாகத்தில் காலை உணவு.  அனைவருக்கும் குளுக்கோஸ் வழங்கப்பட்டது.

2.46 pm

2.58 pm
2.59 pm

ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் பலரும், பொது மக்களும் வந்து குருஜியை வழிபட்டனர்.  குருஜி அவர்களை ஆசிர்வதித்தார்.

மதிய உணவு.
அதன்பின்னர் ஐயப்பன் கோயிலில் இருந்து யாத்திரை புறப்பட்டோம்.

3.48 pm

4.12 pm

4.16 pm 

4.20 pm

4.20 pm
கடல்கோள் (சுனாமி) -  தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்துவதற்காக மலையை வெட்டி யெடுத்துள்ளனர்.  இவ்வாறு மலை வெட்டப்பட்டுள்ள பகுதியில், கிரானைட் பாறைகளுக்கு இடையே மண்படிந்து உள்ளதைக் காணமுடிந்தது.  கடல்கோள் (சுனாமி) உண்டாகி பஃறுளி ஆறும் பன்மலையடுக்கமும் (லட்சத்தீவுக் கூட்டமும்) அழிந்தபோது உண்டான கடல்வெள்ளத்தால் தென்னிந்தியா முழுவதும் அழிந்துள்ளது.  அப்போது கடல்வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட மண் இப்படிப் பாறை இடுக்களில் படிந்துள்ளது என்பது எனது கருத்து. இது குறித்த கட்டுரைகளை எழுதிப் பதிவு செய்துள்ளேன்.  http://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/

4.50 pm

4.58 pm

6.05 pm

குருபராபள்ளி அருகே சாலையோரம் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்கினோம்.  யாத்திரிகர் குளிப்பதற்கு வசதியாகத் தொட்டி நிறையத் தண்ணீர் இருந்தது.  அனைவரும் அலுப்புத்தீரக் குளித்தனர்.
இரவு உணவு.
ஓய்வு.


https://goo.gl/maps/5DTEZY8GVJWgzK9y5
இன்றைய பயணம் சுமார் 31 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக