செவ்வாய், 9 ஜூன், 2020

09.06.2014 காசி பாதயாத்திரை - 15 ஆவது நாள்

09.06.2014 காசி பாதயாத்திரை (15 ஆவது நாள்)
வைகாசி 26 திங்கள் கிழமை.

அதிகாலை 2.40க்கு கீரணூரிலிருந்து புறப்பட்டு 8.10க்கு திருச்சிராப்பள்ளி விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.  விமானநிலையம் எதிரேயுள்ள பிள்ளையார் கோயிலில் குருஜி பச்சைக்காவடியின்  அடியார்களால் காலை உணவு வழங்கப்பட்டது.

அங்கிருந்து புறப்பட்டு 10.40 மணிக்கு PL.A. MARUTHI SERVICE CENTRE, CANTONMENT, வந்து சேர்ந்தோம்.





காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களின் நண்பர்கள் யாத்திரிகளுக்குச் சிறப்புச் செய்து வரவேற்றனர்.  பத்திரிக்கை நண்பர்கள் சிலர் வந்திருந்தனர்.  அவர்கள் இந்த யாத்திரையின் நோக்கம் பற்றிக் கேட்டறிந்து செய்தி வெளியிடுவதாகக் கூறிச் சென்றனர்.

மதிய உணவு.

வானொலிச் செய்தி - 
குருசாமி அவர்களின் அனுமதி பெற்றுத் திருவெறும்பூர் காசிஸ்ரீ கோ.சண்முகவேலு அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு அகிலஇந்திய வானொலி நிலையத்திற்குச் சென்றார்.  நிலைய அதிகாரிகளிடம் இராமேசுவரம் - காசி பாதயாத்திரை பற்றிய தகவல்களைக் கூறினார்.  செய்திப்பிரிவில் இருந்து நிருபர் ஒருவர்  வந்து எல்லாத் தகவல்களையும் காசிஸ்ரீ சண்முகவேலு அவர்களிடம் கேட்டறிந்து கொண்டு, பயணக்குறிப்புகளையும் பெற்றுக் கொண்டனர்.   

இன்று அகிலஇந்திய வானொலி நிலையம் பன்பலை ஒலிபரப்பில் 
மாலை 3.00 மணி செய்திகளில் பாதயாத்திரை பற்றிய செய்தியை அறிவித்தார்கள்.

ஓய்வு.

https://goo.gl/maps/VjU56WxPJY31GAu87
இன்றைய பயணம் சுமார் 24 கி.மீ.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக