இராமேசுவரம் - காசி பாதயாத்திரை -
பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இன்று 37ஆம் நாள் - ஆனி 17 (01.07.2014) செவ்வாய்க் கிழமை.
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று 30.06.2014 திப்புசுல்தான் பிறந்த ஊரான தேவனஹள்ளி வந்து சேர்ந்தோம். இன்று காலை 3.10 மணிக்குத் தினசரி வழிபாடு முடிந்தவுடன் ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுத் தேவனஹள்ளியில் இருந்து பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.
5.28 am
5.44 am
5.54 am
காலை மணி 6.00 அளவில் முதுகுர்கி என்ற ஊரைக் கடந்து சென்றோம். முதுகுர்கி (Mudugurki) என்றால் முதுமையான மலை என்ற பொருளாகுமா?
"விருத்த' என்றால் "முதுமை' என்றும், "அசலம்' என்றால் "மலை' என்றும் பொருள்படும். முதுமையான மலை உள்ள காரணத்தினால் ஊருக்கு “விருத்தாச்சலம்” என்ற காரணப் பெயர் உண்டாகியது என்பர். விருத்தாச்சலம் போன்று முதுகுர்கி என்பதும் முதுமையான மலையைக் குறிக்குமோ? என்ற சிந்தனையுடன் நடந்து சென்றேன்.
"விருத்த' என்றால் "முதுமை' என்றும், "அசலம்' என்றால் "மலை' என்றும் பொருள்படும். முதுமையான மலை உள்ள காரணத்தினால் ஊருக்கு “விருத்தாச்சலம்” என்ற காரணப் பெயர் உண்டாகியது என்பர். விருத்தாச்சலம் போன்று முதுகுர்கி என்பதும் முதுமையான மலையைக் குறிக்குமோ? என்ற சிந்தனையுடன் நடந்து சென்றேன்.
6.23 am
வரும் வழியில் மேற்கே தெரிந்த நந்தி மலையைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.
6.50 am
காலை மணி 6.50 அளவில் சாலையோரம் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம்.
எலவாஹள்ளிவழியாக சிக்பலப்பூர் 8.20 க்கு வந்து சேர்ந்தோம். சிக்பலப்பூரில் அழகழகாக மண்பொம்மைகள் செய்து விற்பனைக்கு வைத்திருந்தனர்.
சிக்பலப்பூர் ஐயப்பன் அடியார்கள் கோயில் வாயிலில் நின்று வரவேற்பு அளித்தார்கள்.
காலை உணவு.
திரு.K. நாகேஷ் தலைமையில் ஐயப்பன் பக்தர்கள் மதியம் அன்னதானம் வழங்கினர்.
(Rameswaram to Varanasi Patha Yathra, Swamy PatchaiKavadi with Sri.Gopal Swamy, and Sri. Raghavendra of Sri Ayyappa Swamy Seva Trust, B.B.Road, Chickbalapur, 562 1015)
ஒய்வு.
இன்றைய பயணம் சுமார் 21 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக