ஞாயிறு, 28 ஜூன், 2020

30.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 23ஆவது நாள், ஆனி 16

பயணக் கட்டுரை - 
அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று  23ஆவது நாள், ஆனி 16 (30.06.2017) வெள்ளிக் கிழமை.

பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பகவிநாயகரை வழிபட்டு பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை, 2) திருப்பரங்குன்றம், 3) திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களில் வழிபாடு செய்துவிட்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் நேற்று பந்தல்குடி வந்து சேர்ந்தோம்.

இன்று அதிகாலை மணி 3.05க்கு வழக்கமான தினசரி வழிபாட்டிற்குப் பின்னர் ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு, பந்தல்குடி சக்திபீடம் கோயிலில் இருந்து யாத்திரை புறப்பட்டோம்.  
அன்பர் வீரபாகு அவர்களும் அவரது குடும்பத்தினரும் எங்களை வழியனுப்பி வைத்தனர்.

ஆறுபடைவீடு பாதயாத்திரை

ஆறுபடைவீடு பாதயாத்திரை
வழியில் ரொட்டியும் தேநீரும்.
காலையில் இருந்தே கடுமையான வெயில்.

அறுபடைவீடு பாதயாத்திரை
இராமனுஜபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை உணவு.
அறுபடைவீடு பாதயாத்திரை
09.30மணிக்கு கல்குறிச்சி நாடார் திருமண மண்டபம் வந்து சேர்ந்தோம்.   அதிகாலையில் யாத்திரை புறப்படும் போது வாளைமீன் போல் துள்ளிக் குதித்து நடந்த யாத்திரிகர் அனைவரும் வெயிலில் காய்ந்து காற்றுப்போன பலூன் போலத் துவண்டுபோய்ப் படுத்துக் கிடந்தனர்.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் மட்டும் எல்லோரும் வந்து சேர்ந்து விட்டார்களா என எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

காசிஸ்ரீ சத்தியமூர்த்தி அவர்கள் எங்களுடன் வந்து சேர்வதற்குக் காலதாமதம் ஆனது.  வெயிலினால் உடல்நலக் குறைவு காரணமாக நடந்து வர மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் கையில் தண்ணீர் வைத்துள்ளரா? என்று  தெரியவில்லை.  எனவே அன்னதானவாகன ஓட்டுநர் திரு. ஆறுமுகம் அவர்கள் சென்று அழைத்து வந்தார்.
ஓய்வு .
தங்கல் .

ஆறுபடைவீடு பாதயாத்திரை

https://goo.gl/maps/3cdxTWixhCtMhP2P8
இன்றைய பயணம் சுமார் 25 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக