ஞாயிறு, 14 ஜூன், 2020

15.06.2014 காசி பாதயாத்திரை - 21ஆம் நாள், ஆனி 1


காசி பாதயாத்திரை -  21ஆம் நாள் 
ஆனி 1 (15.06.2014) ஞாயிற்றுக் கிழமை, 

பொம்மைக்குட்டைமேடு அருகேயுள்ள லட்சுமி கல்யாண மட்ணபத்திலிருந்து புறப்பட்டு புதுச்சத்திரம் விலக்குப்பாதை யருகே உள்ள பேருந்துநிறுத்தத்தில் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் அன்னதான வண்டி வந்து சேர்ந்தது.  காலை நேர ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.  








தேநீர் சாப்பிட்டு முடித்தவுடன் அந்தப் பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்டு அண்டலூர்கேட்  வழியாக முத்துக்காளிப்பட்டி அருகேயுள்ள சக்திபீடம் வந்து சேர்ந்தோம்.







ஸ்ரீ சிவ சக்தி பீடம், பிரசன்ன ஆருட வல்லுநர் சிம்மம் ஆர்.யூ. மேகநாதன் அவர்கள் அடியார்களை வரவேற்று உபசரித்தார்.   மிகவும் இயற்கையான மரங்கள் சூழ்ந்த இடத்தில் ஸ்ரீ சிவ சத்தி பீடம் இருந்தது.  அடியார்கள் அனைவரும் பயணக் களைப்புத் தீரக் குளித்தனர்.   திரு மேகநாதன் அவர்கள் அவரது வீட்டில் வைத்திருந்த பச்சைக்கல் விநாயகர், பச்சைக்கல் சிவலிங்கம், மற்றும் பல்வேறு பளிங்குக் கற்களையும்,  படிக மாலைகளையும் காட்டினார்.


திரு மேகநாதன் அவர்களின் நண்பர் ஒருவரும் குருசாமி அவர்களைக் காண வந்திருந்தார்.  அவர் நெற்றி யெல்லாம் சந்தனம் பூசிக் குங்கும் வைத்து மிகவும் அருள் நிறைந்தவராகக் காட்சியளித்தார்.  அவரிடமிருந்த வலம்புரிச் சங்கு முதலாகப் பல்வேறு படிகமாலைகளையும் பளிங்குக் கற்களையும் கொண்டு வந்திருந்து ஒரு ஜமுக்காளத்தை விரித்து அதில் அழகாக அடுக்கி வைத்துக் காட்சிப் படுத்திக் குருசாமி அவர்களுக்கும் யாத்திரிகர்களுக்கம் காட்டினார்.

யாத்திரிகர் காசிஸ்ரீ தனசேகரன் அவர்கள் மதிய நேர உணவு தயாரிப்பதில் பெரிதும் உதவியாக இருந்து வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்.

ஓய்வு.
மதிய உணவு.

மாலை தேநீர் நேரத்தில், திரு மேகநாதன் அவர்களின் நண்பர் யாத்திரிகர்களிடம் இராமேசுவரம்-காசி பாதயாத்திரையின் சிறப்பு பற்றியும்,  குருவருளால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் வெகுவாக எடுத்துக் கூறினார்.  யாத்திரை முடியும்வரை குருசாமி அவர்கள் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்யுங்கள்.  குருசாமியின் வழிகாட்டுதல் ஒன்றே இந்த யாத்திரையைப் புனிதமாக்கும் என்று கூறினார்.   அவரது பேச்சின் முடிவில் குருசாமி அவர்கள் அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்கினார்.  



இரவு உணவு.  திரு மேகநாதன் அவர்களும் அவரது குடும்பத்தினரும் யாத்திரிகர்களுடன் சேர்ந்து உணவு உண்டனர்.

ஓய்வு.


https://goo.gl/maps/FgLXp5w7UsFWvRwY6
இன்றைய பயண தூரம் 21 கி.மீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக