சனி, 27 ஜூன், 2020

28.06.2014 காசி பாதயாத்திரை - 34ஆம் நாள் - ஆனி 14

காசி பாதயாத்திரை - 
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்
இன்று 34ஆம் நாள் - ஆனி 14 (28.06.2014) சனிக் கிழமை.

பெங்களூரு எலகங்கா  ஐயப்பன் கோயிலுக்கு நேற்று வந்து  சேர்ந்தோம்.   இன்று இங்கேயே தங்கியுள்ளோம்.

பெங்களூர் வாசிகள் பலரும் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்த வண்ணம் இருந்தனர்.  குருசாமி அவர்களும் மிகவும் பொறுமையாக அவர்களது குறைகளைக் கேட்டறிந்து நல்வழிகாட்டி ஆசிவழங்கிய வண்ணம் இருந்தார்.

இன்று யாத்திரிகர்களுக்கு  முழு ஓய்வு.
யாத்திரிகர் பலரும் தத்துவ விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர். தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் புலிமேல் அமர்ந்து வருவது போன்றதொரு சித்திரம் ஒன்று கோயிலில் வரையப்பட்டிருந்தது.  

குட்டிக்குப் பால் கொடுக்கும் தாய்ப்புலியின் மீது ஸ்ரீ ஐயப்பன் சவாரி ஏறி வருவானா?  பால் கொடுத்து  உதவிட முன்வந்த பெண்புலியை வாகனமாகக் கொள்வாரோ? என்ற ஐயங்கள் என்னிடம் தோன்றின. 
http://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2019/11/blog-post.html

நாளையும் இங்கேயே தங்கல்.
கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக