நடைப் பயணத்தில் சிந்தித்தது -
“காசைக் கரியாக்கக் கூடாது,
கரியைக் காசாக்க வேண்டும்”
“காசைக் கரியாக்கக் கூடாது,
கரியைக் காசாக்க வேண்டும்”
அறுபடைவீடு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
3 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ....
இன்று 11ஆம் நாள் - ஆனி 4 (18.06.2017) ஞாயிற்றுக் கிழமை.
வேகாத வெயில்.
சுண்ணாம்புக் காளவாயில் இட்டது போன்று அஃனிக் காற்று வீசிக் கொண்டிருந்தது. எதைப்பற்றியும் எள்ளளவும் கவலைப்படாமல் மனம் மட்டும் திருச்செந்தூரில் இருந்தது. கால்கள் மட்டும் கல்குறிச்சியில் இருந்து சிந்தலக்கரைக்கு நடந்து கொண்டிந்தன.
வெயில் நடந்த காரணத்தினால் மூளையும் சூடாகி ஏதேதோ சிந்தனைகள் உருகி ஓடிவந்தன.
(1) கருவையைக் காசாக மாற்றும் கரிமூட்டம்
(1) கருவையைக் காசாக மாற்றும் கரிமூட்டம்
(2) கடல்கோள்கள்
(3) சாலைவிபத்துகள்
என மூன்று விதமான சித்தனைகள் தலையிலிருந்து வேர்வையாய் வழிந்தோடின....
என மூன்று விதமான சித்தனைகள் தலையிலிருந்து வேர்வையாய் வழிந்தோடின....
கரி மூட்டம் -
பந்தல்குடி அருகே, சாலையோரம் சீமைக்கருவை அல்லது வேலிக்கருவை என்று அழைக்கப்படும் மரங்களை வெட்டிக் கரிமூட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். தமிழகம் எங்கும் விளைநிலங்கள் எல்லாம் பாழ்பட்டுச் சீமைக் கருவை மரங்கள் நிறைந்து வளர்ந்து வருகின்றன. தமிழ்நாட்டில் குறுக்கும் நெடுக்குமாக 1126 கி.மீ. தூரம் நடைப் பயணம் செய்த போது பார்த்தது இது.
தமிழகத்தின் உள்ள சீமைக் கருவேலமரங்களை முறைப்படிப் பயன்படுத்தினால் இது நல்லதொரு பணப் பயிர் ஆகும். எனவே சீமைக் கருவேல மரங்களைச் சும்மா வெட்டி எறிந்து எரிக்காமல், முறைப்படி அதைச் சிறந்த எரிபொருளாக கரியாக மாற்றி ஏற்றுமதி செய்தால் பெரும் பணம் கிடைக்கும்.
"நல்லவை எல்லாஅந் தீயவாம், தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு" ( குறள் )
தீது எனக் கருதப்படும் கருவேல மரத்தை நல்ல கரியாக மாற்றிச் செல்வம் செய்யலாம்.
“தமிழக அரசு இதற்கெனத் தனியொரு துறையைத் தொடங்கிக் காட்டுக் கருவை மரங்களில் இருந்து கரி தயாரித்து, விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றிட வேண்டும்” என்றொரு சிந்தனை.
காசைக் கரியாக்கக் கூடாது,
கரியைக் காசாக்க வேண்டும்.
மற்றவிரு சிந்தனைகளையும் வெயில் ஏறியுடவுன் பதிவு செய்கிறேன்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக