சனி, 20 ஜூன், 2020

21.06.2014 காசி பாதயாத்திரை - 27ஆம் நாள் - ஆனி 7

காசி பாதயாத்திரை - 
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்

இன்று 27ஆம் நாள் - ஆனி 7 (21.06.2014) சனிக் கிழமை, 
காலை 3.10 மணிக்கு வழக்கம்போல் தினசரிவழிபாட்டை முடித்துக்கொண்டு ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுத் தருமபுரி யிலிருந்து  யாத்திரை புறப்பட்டோம்.

6.14 am
அதிகாலை 3.10 மணிக்குப் புறப்பட்ட காரணத்தினால் ரொட்டியும் தேநீரும் சாப்பிடலாம் என்று பெரியாம்பட்டி சாலையோரம் யாத்திரிகர் அனைவரும் காத்திருந்தோம்.  சிலர் அயர்ந்து தூங்கிவிட்டனர்.  ஆனால் அன்னதானவண்டி சற்று காலதாமதமாகக் காலை 6.30 மணிக்கு வந்தது.  ரொட்டியும் தேநீரும் சாப்பிட்ட பின்னர் அங்கிருந்து காலை 6.45 மணி அளவில் புறப்பட்டோம்.

6.45 am

6.59 am

7.02 am

7.07 am
காலை மணி 7.10 அளவில் பெரியாம் பட்டி வழியாகச் சென்றோம்.

7.20 am

7.39 am
பூலாப்பட்டி மற்றும் நாகனம்பட்டி விலக்குப்பாதைகளில்   சாலையோரம் மாம்பழக்கடைகள் நிறைய இருந்தன.  விதவிதமான மாம்பழங்கள் அடுக்கி வைத்து வியாபரம் செய்து கொண்டிருந்தனர்.   காலை நேரத்திலேயே வியாபரம் சுறுசுறுப்பாக நடைபெற்றது.  தேசிய நெடுஞ்சாலையில் செல்வோர் தங்களது வாகனங்களை நிறுத்தி மாம்பழங்கள் வாங்கிச் சென்றனர்.

7.43 am

7.52 am

8.03 am

8.07 am

9.26 am
 காரிமங்கலம் B.C.R. மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகத்தினர் ஊர் எல்லையில் வந்து நின்று சிறப்பான வரவேற்பு அளித்து குருஜியை வழிபட்டனர்.  குருஜி அவர்களை ஆசிர்வதித்தார்.  காலை மணி 9.30 க்கு பள்ளி வளாகத்திற்கு வந்து சேர்ந்தோம்.  
காலை உணவு.  அனைவருக்கும் குளுக்கோஸ் வழங்கப்பட்டது. 
ஓய்வு.

மதியம் 3.00 மணிக்கு காரிமங்கலம் B.C.R. மெட்ரிக்குலேசன் பள்ளியிலிருந்து புறப்பட்டு நடைப்பயணம் மேற்கொண்டோம்.


4.16 pm

4.22 pm

5.02 pm

5.11 pm

5.47 pm
பொம்மசமுத்திரம் விலக்கு, ஜெகதாப் விலக்கு, பையூர் வழியாகக் காவேரிப்பட்டினம் S.M. கலியாணி மண்டபத்திற்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேர்ந்தோம் .

இரவு உணவு .
ஓய்வு.


https://goo.gl/maps/RRwtpgUTHboQZ4S9A
இன்றைய பயணம் சுமார் 36 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக