09.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை
திட்டமிட்டபடி அறுபடைவீடு யாத்திரை வைகாசி 26 ( 09.06.2017 ) வெள்ளிக் கிழமை இன்று காலை 4:00 மணிக்கு திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் இருந்து புறப்பட்டு கீழவளவு வந்து சேர்ந்தோம்.
வழியில் ஊரார் குருசாமி பச்சைக்காவடி அவர்களை வரவேற்று வணங்கி ஆசி பெற்றனர்.
நாளை கீழவளவு சமுதாயக்கூடத்தில் இருந்து அழகர்கோயில் பழமுதிர்ச்சோலை க்குப் பயணம்.
கிருஷ்ணம்பட்டியை அடுத்து கொள்ளுகுடிபட்டிக்கு முன்னால் ஒரு தாயார் அவரது மகனையும் மருமகளையும் அழைத்து வந்து சாலையோரம் காத்திருந்தார். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் வந்தவுடன் அவரது பாதங்களைக் கழுவிப் பாதபூசை செய்து வழிபட்டனர்.
உங்களுக்கு விரைவில் ஆண்குழந்தை பிறக்கும் என்று குருசாமி பச்சைக்காவடி அவர்களை ஆசிர்வதித்தார்.
உங்களுக்கு விரைவில் ஆண்குழந்தை பிறக்கும் என்று குருசாமி பச்சைக்காவடி அவர்களை ஆசிர்வதித்தார்.
பறவைகள் சரணாயம். தண்ணீர் இல்லாத காரணத்தினால் பறவைகள் வரவில்லை. யாத்திரிகர்கள் குருசாமிஅவர்கள் இந்த இடத்திற்கு வரும்வரை சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். குருசாமி அவர்கள் வந்ததும் ரொட்டியும் தேநீரும் வழங்கப்பட்டது.
யாத்திரை தொடர்ந்தது.
சிவகங்கை மாவட்ட எல்லை முடிந்து, மதுரை மாவட்ட எல்லை ஆரம்பமான இடத்திலிருந்து சாலை அகலமாகப் போடப்பட்டிருந்தது. சிவகங்கை மாவட்டத்தினருக்கும் மதுரை மாவட்டத்தினருக்கும் சாலையில் வேறுபாடு காட்டப்பட்டிருப்பதை யாத்திரிகர்கள் பேசி வியந்தனர்.

கடுமையான வேகாத வெயிலில் நடந்து வந்த களைப்பு.
மின்வெட்டு - மின்விசிறிகள் இயங்க வில்லை, வேர்த்து ஊத்தியது. இருந்தாலும் யாத்திரிகர் அனைவரும் அசந்து படத்துவிட்டனர்.
மதிய உணவு.
ஓய்வு.
மின்வெட்டு - மின்விசிறிகள் இயங்க வில்லை, வேர்த்து ஊத்தியது. இருந்தாலும் யாத்திரிகர் அனைவரும் அசந்து படத்துவிட்டனர்.
மதிய உணவு.
ஓய்வு.
குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக