08.06.2014 காசி பாதயாத்திரை (14 ஆவது நாள்)
வைகாசி 25 ஞாயிற்றுக் கிழமை.
அதிகாலை 3.10 மணிக்கு புதுக்கோட்டை யிலிருந்து புறப்பட்டோம்.
நார்த்தாமலை குளத்தூர் வழியாக 10.05 மணிக்கு கீரனூர் வந்து சேர்ந்தோம்.
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மேனாள் சேர்மன் மற்றும் மேனாள் ஊராட்சி மன்றத் தலைவருமான ஐயா M. சத்தியமூர்த்தி அவர்களின் குடும்பத்தினர் யாத்திரிகர்களை வரவேற்று அவர்களது இல்லத்தில் தங்கிடத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர்.
மதிய உணவு. இரவு உணவு. ஓய்வு.
https://goo.gl/maps/qG8KCyujs8qU4xoc7
இன்றைய பயணம் சுமார் 23 கி.மீ.
இன்றைய பயணம் சுமார் 23 கி.மீ.
எனது இன்றைய பயண அனுபவம் -
காலை நேரத்திலேயே கடுமையான வெயில்.
காலை நேரத்திலேயே கடுமையான வெயில்.
கீரனூரில் முனிவர் சுகர் தவம் செய்த இடத்தில் சிவன்கோயில் எழுப்பப் பெற்றுள்ளது. மிகவும் பழைமையான வரலாற்றையும் கல்வெட்டுகளையும் கொண்ட சிவாலயம். எத்தனையோ முறை திருச்சிராப்பள்ளி செல்லும் போதெல்லாம் இங்கே இறங்கிக் கும்பிட்டுச் செல்லவேண்டுமென நினைத்துக் கொள்வேன். ஆனால் அதிகாலை நேரத்தில் திருச்சி செல்வதாலும், திரும்பும்போது இரவு ஆகிவிடுவதாலும் இந்தக் கோயிலுக்குச் செல்ல முடியாமல் போய்விடும்.
இந்தப் பாதயாத்திரையில் கீரனூரில் தங்கியிருக்கும் போது, மாலைநேர ஓய்வு நேரத்தில் கோயிலுக்குச் சென்று வணங்கி வரவேண்டும் என எண்ணிருந்தேன். அதற்கு வாய்ப்புக் கிடைக்காமல் போனது எனக்கு மிகவும் மன வருத்தமாகவே இருந்தது. ஆனால் எனது வேண்டுதல் அடுத்த 2015ஆம் ஆண்டு நிறைவேறியது. இது பற்றிய விரிவான பதிவை 2015ஆம் ஆண்டு பயணக்கட்டுரையில் தனியாக எழுதுகிறேன்.
மருந்தாளுநர் - காசிஸ்ரீ மாதவன் (வரிசை எண் 3) அவர்களுக்கு மதியத்திலிருந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. மாலையில் சிறிது காய்ச்சல் அடித்தது. குருசாமி அவர்கள் அவருக்குச் சில மாத்திரைகளை கொடுத்துச் சாப்பிடச் செய்தார். இன்றிருந்து யாத்திரைக்கான மருந்துப் பையை எடுத்துக் கொண்டு வந்துகொடுப்பதும், மீண்டும் அந்த மருந்துப பையை அன்னதான வண்டியில் வைப்பதும் எனது பொறுப்பாகிப் போனது. யாத்திரிகர்களுக்கு மருந்தாளுநர் ஆனேன்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக