பயணக் கட்டுரை - காசி பாதயாத்திரை -
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்
இன்று 23ஆம் நாள் - ஆனி 3 (17.06.2014) செவ்வாய்க் கிழமை,
இன்று ஒருநாள் முழுதும் ஓய்வு.
யாத்திரிகர் அனைவரும் சேலம் தெய்வீகம் கல்யாண மண்டத்திலேயே தங்கியிருந்தோம்.
மற்றபிற யாத்திரிகர்கள் ஓய்வு எடுத்தாலும், குருசாமி அவர்களுக்கும் எங்களில் சிலருக்கும் நாள் முழுதும் ஓயாத வேலை இருந்தது.
மொத்தம் 7 மாநிலங்களின் வழியாகப் பயணம். இதில் தமிழ்நாடு தவிர்த்து, ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா மகாராஷ்டிரம் மத்தியப்பிரதேசம் உத்திரப்பிரதேசம் என 6 மாநிலங்கள்.
இந்த 6 மாநிலங்களிலும் தேசியநெடுஞ்சாலை எண் 7 வழியாகப் பயணம். எனவே இந்தப் பாதை அமைந்துள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்கள், மற்றுமுள்ள அடியார்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்பும் வேலை நடைபெற்றது.
சுமார் 300க்கும் மேற்பட்ட முகவரிகளை ஒட்டி, தபால்தலை ஒட்டி, மாநிலம் வாரியாகப் பிரித்துக் கட்டி வைத்தோம். காசிஸ்ரீ சரவணன் அவர்கள் அன்னதான வண்டியில் இருந்து கடிதங்கள், கவர், முகவரி, தபால்வில்லைகள், ஒட்டுவதற்கான பசை, மற்றும் கத்திரிக்கோல் இவற்றை வண்டியில் இருந்து எடுத்து வரவும், கொண்டு போய் வைப்பதற்கும் இங்குமங்கும் நடந்து கொண்டே இருந்தார். இவர் இன்று மண்படத்திற்குள் நடந்த தொலைவே ஒருநாள் பயண தூரம் அளவிற்கு இருக்கும்.
குருசாமி அவர்களின் அடியார் ஒருவர் வந்திருந்து அனைத்துக் கடிதங்களையும் தபால்நிலையத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காகப் பெற்றுச் சென்றார்.
யாத்திரை பற்றிய செய்திகள் “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” மற்றும் “தி இந்து” நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. யாத்திரிகர் ஒவ்வொருவரும் அவரவர் அலைபேசியில் இந்தச் செய்திகளைப் படித்து மகிழ்ந்து அவரவர் நண்பர்களிடமும் குடும்பத்தினர்களிடமும் தகவல் தெரிவித்து மகிழ்ந்தனர்.
17.06.2014 9:34 am,
http://epaper.newindianexpress.com/286680/The-New-Indian-Express-Tiruchy/11.06.2014#page/5/2
17.06.2014
http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/on-a-110day-journey-on-foot-for-peace/article6121591.ece#.U5_uO64nLuM.gmail
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
----------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக