வியாழன், 18 ஜூன், 2020

19.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 12ஆம் நாள் - ஆனி 5

அறுபடைவீடு பாதயாத்திரை - 
60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

3 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ....

இன்று 12ஆம் நாள் - ஆனி 5 (19.06.2017)  திங்கள் கிழமை.    சிந்தலக்கரையில் அருள்மிகு வெக்காளியம்மன் கோயில் வளாகத்தில் தங்கியிருந்தோம்.  அதிகாலை 3.20 மணிக்கு தினவழிபாடு செய்து முடித்து, ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்ட பின்னர் அங்கிருந்து யாத்திரை புறப்பட்டோம்.





காலை மணி 6.50 அளவில், வழியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.

கடந்த 2016ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையின் போது சிந்தலக்கரையில் தங்காமல் எட்டையாபுரம் சென்று தங்கிச் சென்றோம்.    இந்த வருடம் சிந்தலக்கரையில் தங்கி எட்டையாபுரம் செல்லாமல் புறவழிச் சாலை வழியாகப் பயணம் மேற்கொண்டோம்.



எப்போதும் வென்றான் அருள்மிகு உஜ்ஜினி மாகாளி யம்மன் கோயில் வழிபாடு செய்து கொண்டு 
அருள்மிகு சோலைசாமி கோயிலுக்கு 8:40 மணிக்கு வந்து சேர்ந்தோம்.  


உஜ்ஜினி மாகாளியம்மன் கோயிலை அடுத்துள்ள இடத்தில் கல்லினால் ஆன செக்குகள் பயனற்றுக் கிடக்கின்றன.  இந்தச் செக்குகள் சுமார் 6அடி ஆழத்திற்குப் புதைக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவற்றை அப்புறப்படுத்த முடியாமல் அப்படியே கிடக்கின்றன.  இதைப் பயன்படுத்திய வணிகர் குடும்பங்களும் இதைப் பராமரிக்க முடியாமல் அப்படியே விட்டுவைத்துள்ளனர்.

ஒரு மரக்கிளையைக் குறுக்கா வெட்டிப் பார்த்தால், அதில் வளையம் வளையமாகத் தெரியும்,  எத்தனை வளையங்கள் உள்ளன என்பதைக் கொண்டு அந்த மரத்தின் வயதைக் கணக்கிட்டுச் சொல்கின்றனர்.  மரத்தில் உள்ள வளையங்கள் போன்று, இந்தக் கல் செக்கில் வளையங்கள் இருந்தன.  சிகப்பு கிரானைட் கல்லில் இதுபோன்ற வளையங்கள் எப்படி உண்டாகியிருக்கும் என்று ஆச்சிரியமாக இருந்தது எனக்கு.


பந்தல்குடியில் இருந்து இரண்டு அன்பர்கள் இங்கே வந்து குருசாமி அவர்களை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர்.
மதிய உணவு,
ஓய்வு.

மதியம் ஓய்வு நேரத்தில் கோயில்தூணில் உள்ள கல்வெட்டைப் படித்தோம்.  கடந்த 2016 ஆம் அறுபடைவீடு பாதயாத்திரையின் போது இந்தக் கல்வெட்டைப் படம் எடுத்துப் பதிவு செய்திருந்தேன்.  மின்தமிழ்க் குழுவில் உள்ள நண்பர் துரை அவர்கள் இந்தக் கல்வெட்டை வாசித்தளித்தார். 
https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/06/blog-post_18.html 

கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.
https://goo.gl/maps/u93Mb9jRxeRCbBVf9

இன்றைய பயணம் சுமார்  19 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக