புதன், 10 ஜூன், 2020

11.06.2014 காசி யாத்திரை - 17 ஆவது நாள்

11.06.2014 காசி யாத்திரை (17 ஆவது நாள்)
வைகாசி 28  புதன் கிழமை.

அதிகாலை மணி 3.10க்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டோம்.
7.15 க்கு அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் வழிபாடு.
சமயபுரம் மாரியம்மன்கோயிலில் அதிகாலையிலேயே பக்தர் கூட்டம் இருந்தது.  இருந்தாலும் குருசாமி அவர்கள் யாத்திரிகர்களை அழைத்துக் கொண்டு தர்மதரிசனம் வழியாகவே சென்றார்.  நல்லதொரு தரிசனம்.

காசி பாதயாத்திரை

காசி பாதயாத்திரை

காசி பாதயாத்திரை



வழிபாடு முடித்து விட்டு நொச்சியம் செல்லும் பாதையில் பயணம் மேற்கொண்டோம்.
சாலையோரம் இருந்த இசுலாமானவர் வீட்டு வளாகத்தில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டுக் கொள்ள அனுமதி கேட்டார். 
அவரும் மகிழ்ந்து, நன்றாக அமர்ந்து சாப்பிட்டுச் செல்லுங்கள் என அனுமதி கொடுத்துக் கைகழுவத் தண்ணீர் வசதியும் செய்து கொடுத்தார்.
அங்கிருந்து 9.15 மணிக்குப் புறப்பட்டு 11.00 மணிக்கு நொச்சியம் சிவன்கோயில் வந்து சேர்ந்தோம்.






காசி பாதயாத்திரை

அருள்மிகு பாலாம்பிகை சமேத சுந்தரேசுவரர் உச்சி கால பூஜை வழிபாடு.
மதிய உணவு.
ஓய்வு.
இன்றும் கடுமையான வெயில்.  ஆங்காங்கே மரநிழலில் நின்று நின்று வந்து சேர்ந்தோம்.
ஒரு பெண் சாமியார் மஞ்சள்சேலை உடுத்தி “காலில் நடையன் இல்லாமல்” அந்த வேகாத வெயிலில் நொச்சியத்திலிருந்து  மணச்சநல்லூர் சென்று கொண்டிருந்தார்.   சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் செல்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.   பூக்குழி இறங்குவதைப் பார்த்துள்ளேன்.  ஆனால் நெருப்புப்போன்று சுட்டெரிக்கும் இந்த வெயிலில் கடுமையான சூட்டில் வெறும்காலுடன் நடந்து செல்வதைப் பார்த்த எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.   

காசி பாதயாத்திரை

https://goo.gl/maps/QUBnRBk3QyLAXy6L6
இன்றைய பயணம் சுமார் 24 கி.மீ.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக