வியாழன், 18 ஜூன், 2020

19.06.2014 காசி பாதயாத்திரை - 25ஆம் நாள் - ஆனி 5

பயணக் கட்டுரை - 
காசி பாதயாத்திரை - 
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்
இன்று 25ஆம் நாள் - ஆனி 5 (19.06.2014) வியாழக் கிழமை, 

காலை 2.50 மணிக்கு புறப்பட ஆயத்தம் ஆனோம்.
வழக்கம்போல் காலைநேர வழிபாடு முடித்து, ஹார்லிக்ஸ் ரொட்டி சாப்பிட்டுவிட்டு பயணத்தைத் தொடங்கினோம்.
ஒவ்வொரு நாளும் குருசாமி பச்சைக்காவடி அவர்கள், அன்னதான வண்டியின் முன் அனைத்து யாத்திரிகர்களையும் நிற்கச் செய்து, யாத்திரிகர்களுடன் அன்னதான வண்டியையும்  சுற்றி வந்து சூடம் காட்டித் தேங்காய் உடைத்துத்தான் யாத்திரை புறப்படுவார்.  இன்று இவ்வாறு செய்யும்போது, யாத்திரிகர்கள் இருவர் வரவில்லை.  நேற்று இரவு அன்பர் அளித்த உணவு அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை போலும்.  அவர்கள் வந்துசேர்ந்து புறப்படும் போது மணி 3.40 ஆகிவிட்டது.

6.00 மணிக்கு தொப்பூர் வந்து சேர்ந்தோம்.
சாலையோரம் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.

6.26 am
Tsunami deposited Clay,  sedimentary rock
6.55 am
7.03 am
தொப்பூர் மலைப்பகுதியைக் கடக்க சிரமமாக இருந்தது.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் மிகவும் மெதுவாகவே மலையேறி வந்தார்.

7.12 am
மலைமீது சாலையோரம் உள்ள  அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி கோயிலை வணங்கிக் கொண்டோம்.  இந்தக் கோயில்வரை பாதை ஏற்றமாக இருந்தது.  இனிமேல் இறக்கமாகச் செல்லும்.  அதனால் நடப்பதில் இனிச் சிரமம் இல்லை.  

புதிதாகச் சாலை போடப்படுவதற்கு முன் இந்த இடத்தை லாரிகளும் பேருந்துகளும் கடந்து செல்வது மிகவும் சிரமமாக இருந்துள்ளது.  அந்நாட்களில் இந்த ஆஞ்சநேயர்கோயில் வாகன ஓட்டுநர்களும் பயணிகளும் கூட்டமாக நின்று வழிபடுவர்.  இப்போது, சாலை அகலப்படுத்தப்பட்டு இருவழிச் சாலையாக மாற்றப்பட்ட பின்னர்,  ஓரிரு நிமிடங்கள் நின்று கும்பிட்டுவிட்டுச் செல்கின்றனர்.  

7.13 am
7.27 am
7.33 am
7.34 am
8.25 am
9.00 மணி க்கு டோல்கேட் அடைந்ததும் காலை உணவு.  அனைவருக்கும் குளுக்கோஸ் வழங்கப்பட்டது.


10.05 am

10.29 am
10.29 am
10.38 am
11.08 am

11.30 க்கு நல்லம்பள்ளி வந்து சேர்ந்தோம்.
1.30 க்கு மதிய உணவு.
ஓய்வு.

3.00 மணிக்கு  நல்லம்பள்ளியில் இருந்து புறப்பட்டு தருமபுரிக்கு நடக்கத் தொடங்கினோம்.
3.39 pm

3.49 pm
3.52 pm
5.26 pm
5.40 pm
5.59 pm
6.02 pm
6.07 pm
மாலை 6.00 மணிக்கு தருமபுரி வந்து சேர்ந்தோம்.  கடைவீதி அருகேயுள்ள ஸ்ரீ அபிராமி மஹாலில் தங்கினோம்.  தருமபுரி ஊரார் சிறப்பான வரவேற்பு அளித்து  குருசாமியை வழிபட்டனர்.  தருமபுரி அன்பர்கள் பலரும் குடும்பம் குடும்பமாக வந்திருந்து குருசாமி அவர்களிடம் ஆசிபெற்றுச் சென்றனர்.

இரவு உணவு.
இன்று யாத்திரிகர்களுக்கு சத்து (விட்டமின்) மாத்திரைகள் வழங்கப்பட்டன.
ஓய்வு.


https://goo.gl/maps/qBZb6u3M52t4Xqp77
இன்றைய பயணம் சுமார் 35 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக