சனி, 13 ஜூன், 2020

14.06.2014 காசி பாதயாத்திரை - 20 ஆவது நாள், வைகாசி 31

காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் வழியாக - 2464 கி.மீ. பயணம்.

20 ஆவது நாள், வைகாசி 31 (14.06.2014) சனிக்கிழமை.

இன்று காலை 3.00 மணிக்கு ஏலூருப்பட்டியிலிருந்து புறப்பட்டு 6.00 மணிக்கு வளையபட்டி  வந்து சேர்ந்தோம்.  தேநீர்.





நாமக்கல் ஊர் எல்லையில் மரத்தடியில் காலை உணவு.
9.15    மணிக்கு நாமக்கல் பார்வதி கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தோம்.
ஓய்வு.

மதிய உணவிற்குப் பின்னர்,
மாலை 3.00 மணிக்கு மண்டபத்திலிருந்து புறப்பட்டோம்.







மாலை  4.10 மணிக்கு நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலை வந்தடைந்தோம்.  நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயிலில் நல்லதொரு வழிபாடு.  அடியார்களுக்கு மிகவும் மனநிறைவான வழிபாடு.



ஸ்ரீ ஆஞ்சனேயர் கோயிலை அடுத்து, ஸ்ரீ லெட்சுமி நரசிம்மர் கோயில் வாயில் வழியாக நடந்து சென்றோம்.  இருட்டுவதற்கு முன் சேலம் சென்றுவிட வேண்டும் என்ற காரணத்தினால் அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நரசிம்மர் கோயிலுக்குள் சென்று வழிபட நேரம் இல்லாமல் போனது.  நுழைவாயில் மற்றும் விமானத்தை வணங்கிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.


சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து பொம்மைக்குட்டை மேட்டில் உள்ள லட்சுமி கல்யாண மண்டபத்தைச் சுமார் மாலை 6.30 மணி அளவில் அடைந்தோம்.

மண்டபம் காற்றோட்டமாக நல்ல வசதியாக இருந்தது.

அடியார்கள் சிலர் குடும்பத்தினருடன் வந்து யாத்திரிகர்களுக்கு இரவு உணவு அளித்து மகிழ்ந்தனர். இரவு உணவு முடிந்தவுடன், யாத்திரிகர் அனைவரும் பயணக் களைப்பால் படுத்துத் தூங்க ஆரம்பித்தனர்.  ஆனால் குருசாமி பச்சைக்காவடி  அவர்கள் வந்திருந்த அடியார்களை நலம் விசாரித்து அவர்களை ஆசிர்வதித்துப் பிரசாதம் வழங்கினார். 

காவல்துறையிலிருந்து ஒருவர் வந்திருந்து யாத்திரை பற்றிய செய்திகளைக் கேட்டறிந்து குறிப்புகள் எடுத்துச் சென்றார்.  குருசாமி அவர்கள் அவரிடம் பயணக்குறிப்புகளைக் கொடுத்து அவரையும் ஆசிர்வதித்துப் பிரசாதமும் வழங்கி அனுப்பி வைத்தார்.

ஓய்வு.



https://goo.gl/maps/AYM1sn2abjwMsnTo8

இன்றைய பயணம் சுமார் 35 கி.மீ.
-------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக