பயணக் கட்டுரை -
அறுபடைவீடு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
இன்று 14ஆம் நாள் - ஆனி 7 (21.06.2017) புதன் கிழமை
குருஜி பச்சைக்காவடி அவர்களது அறுபடைவீடு பாதயாத்திரை குழுவினர் இன்று ஆனி 7 (21.06.2017) புதன் கிழமை வாலசமுத்திரம் சமுதாயக் கூடத்தில் இருந்து வழக்கமான தினசரி வழிபாட்டை முடித்துக் கொண்டு ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டு அதிகாலை 3:20க்குப் புறப்பட்டோம்.
ஸ்பிக்நகர் கலையரங்கில் காலை உணவு, ஓய்வு.
ஸ்பிக் நிர்வாகத்தினர் மளிகைப் பொருட்களை உபயமாக வழங்கினர்.
குருசாமியின் அன்பர் ஸ்பிக்நகர் திரு. நடராஜன் அவர்கள் எரிவாயு சிலிண்டர் ஒன்று கொடுத்தார்.
குருசாமியின் அன்பர் ஸ்பிக்நகர் திரு. நடராஜன் அவர்கள் எரிவாயு சிலிண்டர் ஒன்று கொடுத்தார்.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக