திங்கள், 22 ஜூன், 2020

23.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 16ஆம் நாள் - ஆனி 9

பயணக் கட்டுரை -
அறுபடைவீடு பாதயாத்திரை 
60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று 16ஆம் நாள் - ஆனி 9 (23.06.2017) வெள்ளிக் கிழமை.   இன்று திருச்செந்தூரில் வழிபாடு.
திருச்செந்தூர் நகரவிடுதியில் தங்கல், ஓய்வு.

குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர் அனைவரையும் அழைத்துக் கொண்டு திருச்செந்தூரில் வழிபாடு செய்வித்தார்.  அருள்மிகு முருகப்பெருமானை வழிபட வரிசையில் நின்று கொண்டிருந்தபோது எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் வேண்டியது வேண்டியபடி நடைபெற்றது.  இது குறித்துத் தனியாக எழுதியுள்ளேன். https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/06/16-9-23062017_22.html


கோயில் வழிபாடு முடித்துக் கொண்டு கோயில் வளாகத்திற்கு அருகேயுள்ள வள்ளி குகைக்குச் சென்று வழிபாடு செய்து கொண்டோம்.

கடல்கோள் (சுனாமி) - வள்ளிகுகை அருகே பாறைகள் பெயர்ந்து இருப்பதைக் காணலம்.   கடல்கோளால் (சுனாமியால்) உண்டான கடல் அலைகள் கரையைக் கடக்கும்போது, கடல் அலைகள் இந்தப் பாறைகளைப் பெயர்த்தெடுத்துப் போட்டுள்ளது.  இவ்வாறு பாறைகள் புடைபெயர்ந்து கிடப்பதைத் தமிழகம் ஆந்திரம் மற்றும் கிழக்குக் கடற்கரையோரம் எங்கும் காணலாம்.   திருச்செந்தூரில் பாறைகள் இவ்வாறு பெயர்ந்து இருப்பது பற்றிய பதிவை இணைத்துள்ளேன். https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2020/05/blog-post.html

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக