06.06.2014 காசி பாதயாத்திரை (12 ஆவது நாள்)
வைகாசி 23 வெள்ளிக் கிழமை.
அதிகாலை 3.45 மணிக்கு கொண்ணம்பட்டி ஸ்ரீ பழனியாண்டவர் திருமண மண்டபத்திலிருந்து புறப்பட்டோம். நேற்றைய சூறைக்காற்றிலும் ஒருமணி நேரத்திற்கும் கூடுதலாகப் பெய்த மழையின் காரணமாகவும், வழி நெடுகிலும் மரங்கள் சாய்ந்து, கிளைகள் ஒடிந்து, சாலையில் விழுந்து கிடைத்தன.
6.00 மணிக்கு கூழிப்பிறை (குழிப்பிறை என்று அழைக்கப்படுகிறது) அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். கோயிலில் வழிபாடு. ரொட்டியும் தேநீரும்.
8.00 மணிக்கு பனையபட்டி.
வழியில் புல்லான் சாது அவர்களின் ஜீவசாமி உள்ள திசையைப் பார்த்து வணங்கிகொண்டே பயணத்தைத் தொடர்ந்தோம்.
10.00 மணிக்கு நச்சாந்துபட்டி சிவன்கோயில் எதிரேயுள்ள நகரத்தார் விடுதிக்குப் போய்ச் சேர்ந்தோம்.
குழிப்பிறை பனையபட்டி நச்சாந்துபட்டி இந்த ஊர்களில் எல்லாம் நகரத்தார்களும் பொது மக்களும் கூடி நின்று வரவேற்பு அளித்து வழிபாடு செய்வித்தனர்.
ஓய்வு
https://goo.gl/maps/4MXrJq3byf9MxwPF9
06.06.2014 கொண்ணம்பட்டி நச்சாந்துபட்டி
பயணம் சுமார் 17 கி.மீ.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக