அறுபடைவீடு பாதயாத்திரை
3ஆம் நாள் வைகாசி 27 (10.06.2017)
3ஆம் நாள் வைகாசி 27 (10.06.2017)
முழுமுதற் கடவுள் ஆனைமுகத்தான் அருள்.
இந்தியப் பெருநாட்டில் உள்ள அனைத்து மக்களின் நலம்காக்க, நாட்டுக்கோட்டை நகரத்தார் நலம்காக்க, பனிரெண்டு முறை இராமேச்சுரம் காசி பாதயாத்திரை சென்று ஆண்டவனின் அருள் பெற்ற வலையபட்டி பச்சைக்காவடி அவர்களின் அறுபடைவீட்டிற்கான இரண்டாம் ஆண்டு ஆன்மிகப் பாதயாத்திரை.
வைகாசி 27 (10.06.2017) சனி காலை மணி 4:10க்கு கீழவளவு சமுதாயக் கூடத்தில் இருந்து புறப்பட்டு அழகர்கோயில் நகரத்தார் விடுதி வந்து சேர்ந்தோம்.
காலை 7மணியளவில், வழியில் உள்ள பெட்ரோல் பங்கில் ரொட்டியும் தேநீரும்.
கல்மரம் போன்ற ஒன்று சாலையோரடம் கிடந்தது. இது கல்லாகிய மரமா? என ஆய்வு செய்யப்பெற வேண்டும். இது கல்மரமாக இருந்தால் இதன் வயது பல லட்சம் வருடங்களுக்கு முந்தியதாக இருக்க வேண்டும்.
மதுரை மற்றும் அருகில் உள்ள ஊர்களில் வசித்து வரும் நாட்டுக்கோட்டை நகரத்தார் பலரும் அழகர்கோயில் நகரத்தார் மண்டபத்திற்கு வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் நல்லாசி பெற்றுச் சென்றனர்.
அருள்மிகு கள்ளழகரை வழிபாடு செய்திட வேண்டி, குருசாமி பச்சைக்காவடி அவர்கள், மாலை நேரத்தில் யாத்திரிகர் அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக