அறுபடைவீடு பாதயாத்திரை -
60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
இன்று 11ஆம் நாள் - ஆனி 4 (18.06.2017) ஞாயிற்றுக் கிழமை.
பந்தல்குடி ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் அதிகாலை 3.20 மணிக்கு தினவழிபாடு செய்தோம்.
ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டோம்.
தாப்பாத்தி வழியாகச் செல்லும் வழியில் காலை 7.00 மணி அளவில் தேநீர்.
கரி மூட்டம் - சாலையோரம் சீமைக்கருவை மரங்களை வெட்டிக் கரிமூட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். தமிழகம் எங்கும் சீமைக் கருவை மரங்கள் நிறைந்து விளைநிலங்கள் எல்லாம் பாழ்பட்டுப் போய்யுள்ளன. தமிழக அரசு இதற்கெனத் தனியொரு துறையைத் தொடங்கி வைத்து, சீமைக்கருவை யிலிருந்து செய்யப்படும் கரியை ஏற்றுமதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது எனது கருத்து. இது குறித்துத் தனியொரு கட்டுரை எழுதியுள்ளேன்.https://letters-kalairajan.blogspot.com/2018/10/blog-post.html
கடல்கோள் - சாலையோரம் பல்வேறு பௌதிகத்தன்மை யுடைய பாறைகளின் (sedimentary rocks ) படிமங்களைக் கண்டேன். இந்த பாறைகள் கடல்கோளால் (பெருஞ் சுனாமியினால்) உருவானவை. கடல்கோள் நிகழ்வின்போது கடல்வெள்ளம் கரையைக் கடந்து வரும்போது, கடல்நீரால் அடித்து வரப்பட்ட களிமண் காய்ந்து இறுகி இந்தப் பாறைகள் உருவாகியுள்ளன என்பது எனது கருத்து. இது பற்றித் தனியாக எழுதியுள்ளேன்.https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/08/blog-post_28.html
சிந்தலக்கரை வெக்காளி அம்மன் கோயிலுக்கு 11:00 மணிக்கு வந்து சேர்ந்தோம் .
கடுமையான வெயில்.
சாலை விபத்து - சிந்தலக்கரையில் சாலையின் கிழக்குப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குச் செல்வதற்காகச் சாலையின் மேற்குப் பகுதியில் இருந்து சாலையைக் கடந்துவர முயன்றவர் மீது தூத்துக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருந்தது. ஊரார் கூடி நின்று விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர். நான்குவழிச் சாலையில் ஏற்படும் சாலைவிபத்துகள் பற்றித் தனியொரு கட்டுரை எழுதியுள்ளேன். https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2018/03/blog-post_9.html
சிந்தலக்கரையில் வேகாத வெயிலில் சுடச்சுட மதிய உணவு.
சிந்தலக்கரை கோயிலில் பக்தர்களுக்குக் கேப்பைக்கூழ் ஊறுகாய் வழங்கினர். சாலையில் பயணம் செய்யும் பலரும் வாகனங்களை நிறுத்திவிட்டு, வழிபாடு செய்து கொண்டு கூழ் வாங்கிக் குடித்து ஓய்வு எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தனர்.
இரவு நேரத்தில் நல்ல காற்று.
இரவு உணவு .
ஓய்வு .
https://goo.gl/maps/89LYZn2KZLSqDByo7
இன்றைய பயணம் சுமார் ....29 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக