பயணக் கட்டுரை - காசி பாதயாத்திரை -
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்
இன்று 29ஆம் நாள் - ஆனி 9 (23.06.2014) திங்கள் கிழமை.
சூளகிரி செல்லும் வழியில் இன்று அதிகாலையில் ஒரு விபத்து நடந்து இருந்தது. சாலை யெங்கும் கண்ணாடித் துண்டுகள் சிதறிக் கிடந்தன. பாதயாத்திரையின்போது காலில் நடையன் (செருப்பு) அணிந்து செல்வதன் அவசியத்தையும் கையில் டார்ச்லைட் எடுத்துச் செல்வதன் அவசியத்தையும் யாத்திரிகர் அனைவரும் உணர்ந்தனர்.
காலை நேரம் சுமார் 7.00 மணி யளவில் சூளகிரி மலையைக் கண்டு வணங்கிக் கொண்டு நடந்தோம்.
7.08 am
7.08 am
7.22 am
7.08 am
7.08 am
7.22 am
தேசிய நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றுவதற்காக அகலப்படுத்தியபோது மலைகளை வெட்டி எடுத்துள்ளனர். இது போன்ற இடங்களில் மலைகளில் கிரானைட் பாறைகளிடையே கடல்வெள்ளத்தினால் அடித்து வரப்பட்ட மண் படிந்துள்ளதைக் காண முடிந்தது.
7.23 am
7.23 am
சூளகிரி அருகே அன்பர்கள் பலர் குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசிபெற்றனர்.
7.30 am
7.31 am
குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்களுள் ஒருவர் வந்திருந்து யாத்திரிகர்களை வரவேற்றுத் திருமணமண்டபத்தில் தங்கவைத்து உபசரித்தார்.
சூளகிரி மலையடிவாரத்தில் உள்ள M.M. மஹாலில் தங்கல்.
ஓய்வு.
2.14 pm
சூளகிரி சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி பீடத்தில் வழிபாடு செய்து கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
7.30 am
7.31 am
குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்களுள் ஒருவர் வந்திருந்து யாத்திரிகர்களை வரவேற்றுத் திருமணமண்டபத்தில் தங்கவைத்து உபசரித்தார்.
7.34 am
ஓய்வு.
சூளகிரி சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி பீடத்தில் வழிபாடு செய்து கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
சாலையோரும் மாலைநேரத்தில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.
கோபசந்திரம் அருள்மிகு தட்சண திருப்பதி ஸ்ரீ வெங்கடேஷ பெருமாள் கோவிலைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.
5.09 pm
5.09 pm
காமன்தொட்டி அருகே, குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அன்பர் சிலர் வந்திருந்து யாத்திரிகர்கள் தங்குவதற்கான தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர். குருசாமி அவர்களை ஆசிர்வதித்தார்.
தென் பெண்ணை ஆற்றின் (Ponnaiyar River) கரையில் உள்ள தட்சிணதிருப்பதி கோயில் அருகில் உள்ள சமுதாயக்கூடத்தில் தங்கியிருந்தோம்.
சமுதாயக்கூடத்தில் உள்ள தண்ணீர்த்தொட்டியில் நன்றாகக் குளித்தோம்.
மாலைநேரம் ஆற்றங்கரையில் இருந்து அருமையாகக் காற்று வீசியது.
5.11 pm
சமுதாயக்கூடத்தில் உள்ள தண்ணீர்த்தொட்டியில் நன்றாகக் குளித்தோம்.
மாலைநேரம் ஆற்றங்கரையில் இருந்து அருமையாகக் காற்று வீசியது.
5.11 pm
5.12 pm
------------------
https://goo.gl/maps/soVmVUf6Z3PwJRC78
இன்றைய பயணம் 21 கி.மீ.
23.06.2014 காசி யாத்திரை தினத்தந்தி செய்தி.
http://epaper.dailythanthi.com/showxml.aspx?id=16296636&code=1728 (இப்போது இந்த இணைப்பில் உள்ள செய்தியைக் காண இயலவில்லை. இந்தச் செய்தியை யாரேனும் எடுத்துக் கொடுத்து உதவினால் நல்லது.)
கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.
https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/06/28-8-22062014.html
இன்றைய பயணம் சுமார் 21 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக