பயணக் கட்டுரை - அறுபடைவீடு இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
இன்று 20ஆவது நாள், ஆனி 13 ( 27.06.2017) செவ்வாய்க் கிழமை.
வாலசமுத்திரத்தில் இருந்து அதிகாலை மணி 3:20 க்கு தினசரி வழிபாட்டை முடித்து, ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுப் பாதயாத்திரை புறப்பட்டோம். காலை மணி 7.10க்கு மணிக்கு எப்போதும்வென்றான் சோலைசுவாமி கோயிலுக்கு வந்து சேர்ந்தோம் .
தேநீர், காலை உணவு.
ஓய்வு .
தங்கல் .
கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.
https://goo.gl/maps/2rkDuBRz1CxZ9dd2A
இன்றைய பயணம் சுமார் 15 கி.மீ.
எல்லாச் சமுதாய மக்களும் மிகவும் ஒற்றுமையாக எப்போதும் வென்றான் கோயிலில் வழிபாடு செய்து வருகின்றனர். கோயில் தூண்களில் அடியார்களின் சிற்பங்கள் உள்ளன. எப்போதும்வென்றான் கோயிலைப் பற்றித் தனியொரு கட்டுரை எழுதியுள்ளேன்.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக