12.06.2014 காசி பாதயாத்திரை (18 ஆவது நாள்)
வைகாசி 29 வியாழக் கிழமை.
அதிகாலை 2.15க்கு நொச்சியம் சிவன் கோயிலில் இருந்து புறப்பட்டோம்.
5.50 க்கு குணசீலம் வந்து வந்து சேர்ந்தோம்.
மிகவும் புராதனமான கோயில். அருள்மிகு ஹேமவர்ணேசுவரி அம்பாள் சமேத அருள்மிகு தார்மீகநாதர் திருக்கோயில். மிகவும் தொன்மையான சுயம்புலிங்கம். தட்சிணாமூர்த்தி, காலபைரவர், நவகிரகங்கள் நிறுவப்பட்டுள்ளன. பழைமையான நந்தி உள்ளது. அருள் நிறைந்த கோயில்.
8.00 மணிக்கு அய்யம்பாளையம் வந்து சேர்ந்தோம்.
அருள்மிகு முருகன் கோயிலில் ஒரு திருமணம் நடைபெற்றது.
10.00 மணிக்கு முசிறி வந்து சேர்ந்தோம்.
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் உச்சி கால பூஜை வழிபாடு.
மதிய உணவு.
அடியார் ஒருவர் குடும்பத்துடன் வந்து யாத்திரிகர்களுக்கு வேட்டியும் துண்டும் தானம் வழங்கினார்.
https://goo.gl/maps/GxNShpVyoaS5rEZx6
காவேரியின் வடகரையோரம் இன்றைய பயணம் சுமாம் 30 கி.மீ.
கிராமங்களில் சாலையோரங்களில் நீர்த்தொட்டிகள் இருந்தன. தண்ணீர் மிகவும் சுவையாகவும் சுத்தமாகவும் இருந்தது.
கிராமங்களில் சாலையோரங்களில் நீர்த்தொட்டிகள் இருந்தன. தண்ணீர் மிகவும் சுவையாகவும் சுத்தமாகவும் இருந்தது.
ஓய்வு
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக