பயணக் கட்டுரை - காசி பாதயாத்திரை -
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்
இன்று 32ஆம் நாள் - ஆனி 12 (26.06.2014) வியாழக் கிழமை.
சந்திரபுறா (பெங்களூரு) என்ற ஊரில் இருந்து காலை 3.15 மணிக்கு தினசரி வழிபாடு செய்துமுடித்து ஹார்லிக்ஸ் ரொட்டி சாப்பிட்டுவிடுப் பாதயாத்திரை புறப்பட்டோம்.
6.23 am
திரு, சிவாப்பா அவர்களின் நண்பர்கள் மூவர் சாலையோரம் நின்றிருந்து எங்களை வரவேற்றனர். சிறிது தூரம் எங்களுடன் பேசிக்கொண்டே நடந்து வந்து எங்களை வழியனுப்பி வைத்தனர்.
திரு, சிவாப்பா அவர்களின் நண்பர்கள் மூவர் சாலையோரம் நின்றிருந்து எங்களை வரவேற்றனர். சிறிது தூரம் எங்களுடன் பேசிக்கொண்டே நடந்து வந்து எங்களை வழியனுப்பி வைத்தனர்.
7.07 am
7.07 am
வேதமாதா காயத்திரி தேவி கோயில் வாயிலில் நின்று வணங்கிக் கொண்டோம். மடிவாலா ஐயப்பன் கோவிலுக்கு 7.15 க்கு வந்து சேர்ந்தோம். சொல்லி வைத்தார்போல், குருசாமி பச்சைக்காவடி அவர்கள் கோயிலுக்குள் வந்து கும்பிடுவதற்கும், தீபம் காட்டுவதற்கும் சரியாக இருந்தது. பிரசாதம் வழங்கினார்கள். இவ்வளவு கனகச்சிதமாக நொடிப்பொழுது நேரம்கூட மாறாமல் தீபம்காட்டிப் பிரசாதம் வழங்கப்பட்டது மனதிற்கு நெகிழ்சியாக இருந்தது.
சாலையோரம் இருந்த ஸ்ரீ ஆஞ்சனேயரைக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் வணங்கிக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தார்.
மடிவாலா ஐயப்பன் கோயில் இருந்து தாவரக்கரை ஐயப்பன் கோயிலுக்கு 8.15க்குவந்து சேர்ந்தோம்.
காலை உணவு.
ஒய்வு.
1.08 pm
மாலை ஐயப்பன் வழிபாடு.
2.32 pm
2.32 pm
மின்தமிழ் நண்பர் கவிஞர் கந்தசாமி அவர்கள் வந்திருந்து என்னை வரவேற்றார்.
“ காசிஸ்ரீ பட்டம் வாங்கப் போய்க் கொண்டிருக் கின்றீர்கள் ” என்றார். முனைவர் பட்டம் பெற்றதைவிட அரியதொரு பட்டத்தைப் பெறுவதற்காகப் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று அவர் சொன்னது எனக்கு மிகவும் மன மகிழ்ச்சி அளித்தது.

“இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்”
(அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:91)
இதுவரை நடந்து வந்த களைப்பு இந்த வார்த்தையால் நீங்கிப் புத்துணர்ச்சி உண்டானது. குருசாமி அவர்களிடம் கந்தசாமி ஆசிபெற்றுச் சென்றார். மதிய உணவு.
ஓய்வு.
மாலை ஐயப்பன் வழிபாடு.
இரவு உணவு.
ஓய்வு.
2.32 pm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக