காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்
இன்று 22ஆம் நாள் - ஆனி 2 (16.06.2014)
திங்கள் கிழமை,
இன்று காலை 2.50 மணிக்கு சக்தி பீடத்திலிருந்து புறப்பட்டோம்.
கடல்கோள் பற்றித் தமிழ் இலக்கியங்களில் பதிவுகள் உள்ளன. திருவிளையாடற் புராணத்தில் மதுரைவரை வந்த சுனாமியைப் பற்றிய குறிப்புகள் நான்கு இடத்தில் உள்ளன. குமரிக்கோடும் பஃறுளியாறும் பன்மலை யடுக்கமும் அழிந்தபோது உண்டான கடல்வெள்ளத்தால் (பெருஞ் சுனாமியினால்) தமிழகம் ஆந்திரம் கர்நாடகம் எங்கும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. கிரானைட் மலைகளில் மேல் படிந்துள்ள காரையும் செம்மண்ணும் கடல்கோளால் உண்டானவை என்பது எனது கருத்து.
6.00 மணிக்கு மல்லூர் வந்து சேர்ந்தோம்.
அன்பர் ஒருவர் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று பாதபூஜை செய்து தேநீர் வழங்கி உபசரித்தார்.
அங்கிருந்து புறப்பட்டு 8.00 மணிக்கு கெஜ்ஜல்நாயக்கன் பட்டியை அடுத்துள்ள
பொய்மான்கரடு வந்து சேர்ந்தோம். இங்கும் ஒரு அடியார் யாத்திரிகர்களை வரவேற்றார். அன்னதான வண்டியும் வந்து சேர்ந்தது. காலை உணவு.
அங்கிருந்து புறப்பட்டு மணி 11.30க்கு சேலம் தெய்வீகம் கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தோம்.
ஓய்வு.
மதிய உணவு.
அடியார் ஒருவர் அன்னதானம்.
ஓய்வு.
யாத்திரைக்குத் தேவையான உணவுப் பொருட்கள் சரிபார்த்து
அன்னதான வண்டியில் அடுக்கி வைக்கப்பட்டன.
மாலை தேநீர்.
இரவு உணவு.
ஓய்வு.
https://goo.gl/maps/Qn6TTCB1up2Fud1W7
இன்றைய பயண தூரம் சுமார் 28 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக