புதன், 17 ஜூன், 2020

பெரும் பூசணி (இராமேசுவரம் காசி - பாதயாத்திரை - சிந்தனைகள்)

பாதயாத்திரை - சிந்தனைகள்

பாதயாத்திரை -
2014ஆம் ஆண்டு இராமேசுவரத்திலிருந்து  காசி வரை 110 நாட்களில் 7 மாநிலங்களைக் கடந்து  2464 கி.மீ. நடைப் பயணம்.

2015ஆம் ஆண்டு நாக்பூரிலிருந்து காசிவரை  40 நாட்களில் 700 கி.மீ. நடைப் பயணம்.

2016 ஆம் ஆண்டு பிள்ளையார்பட்டியிலிருந்து புறப்பட்டு திருத்தணிகை வரை அறுபடைவீடு பாதயாத்திரை 60 நாட்களில் 1126 கி.மீ.  நடைப் பயணம். 

2017 ஆம் ஆண்டு பிள்ளையார்பட்டியிலிருந்து புறப்பட்டு திருத்தணிகை வரை அறுபடைவீடு பாதயாத்திரை 60 நாட்களில் 1126 கி.மீ.  நடைப் பயணம்.

மொத்தம் 2464 + 1126 = 3590 கி.மீ. நடைப் பயணம்.

பெரும் பூசணி, பரங்கி,

பாதயாத்திரைச் சிந்தனை - 

விவசாய நிலத்தில்தான் பயிரவேண்டும் என்ற அவசியம் இல்லை.  சும்மா கிடக்கும் சாலையோரங்களிலேயே பயிரிடலாம்.  பெரும் பலனை அடையலாம்.

இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் நீளம் சுமார் 2,00,000 கி.மீ.
எவ்வளவு மழை பெய்தாலும் சிறிதளவுத் தண்ணீர்கூடச் சாலையில் தேங்கி நிற்காதவாறு வடிகால் வசதியுடன் சாலையை அமைத்துள்ளனர்.  சாலையில் விழும் மழைத் தண்ணீரெல்லாம் வழிந்தோடி விடுகிறது.  இவ்வாறு சாலை யோரங்களில், சிறுமழை பெய்தாலும் சிறிதளவு தண்ணீர் நிற்கும் இடங்களி லெல்லாம் பெரும்பூசணி விதையை ஊன்றி வைக்கலாம்.  ஊன்றிட இயலாவிட்டால் சும்மா விதைத்து விடலாம்.


இவ்வாறு செய்தால் சுமார் 4 மாதங்களில் பூசணிக்காய் காய்த்துச் சாலையோர மெங்கும் நிறைந்து கிடக்கும். 

பெரும்பூசணிக்கு நீர்மேலாண்மை என்பது தேவையில்லாதது.  அதுவாகவே கிடைக்கும் நீரைக் கொண்டு வளர்ந்து படர்ந்து விடும்.
பாதுகாப்புக் கருதி, சாலையோரங்களில் யாரும்  ஆடுமாடுகளை மேய்ப்பதும்  இல்லை.  அப்படியே மனிதர்களோ மிருகங்களோ இதைச் சாப்பிட்டாலும் நஷ்டம் ஏதுமில்லை.  

பெரிய முதலீடு ஏதும் செய்யாமல், நான்கு மாதங்களில் ஓராண்டிற்கான விளைச்சல் கிடைத்துவிடும்.  இதையும் சும்மா வீட்டில் வைத்திருந்தாலே போதும்,  சுமார் 6 மாதங்களுக்கும் மேலாகக் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.  

எனவே, எப்படிப் பார்த்தாலும், முதலீடு தேவையில்லை, தண்ணீர் தேவையில்லை, வேலி பாதுகாப்புத் தேவையில்லை,  சேமித்து வைப்பதற்கான வசதி ஏதும் தேவையில்லை.   ஆனால் உற்பத்தியோ அதிகமாக இருக்கும்,  ஓராண்டிற்கு காய்கறித் தேவையைப் பெரிதும் பூர்த்தி செய்து விடும்..

காசு கொடுத்துத்தான் காய்கறி வாங்க வேண்டும் என்ற நிலைமையைக் கணிசமாக மாற்றி யமைத்திடலாம்.🙃

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக