அறுபடைவீடு பாதயாத்திரை -
8ஆம் நாள் - ஆனி 1 (15.06.2017) வியாழக்கிழமை.
குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அனுமதி பெற்று, அதிகாலை 5.00 மணியளவில் கோயில் வாயிலுக்குச் சென்று, முருகப்பெருமானை நினைந்து வணங்கிக் கொண்டு கிரிவலம் செய்தோம்.
கிரிவலத்தின்போது மலையின் தெற்குப்பகுதியில் உள்ள குடைவரைக் கோயிலுக்குச் சென்று வணங்கிட வாய்ப்பில்லாமல் போனது. தென்பரங்குன்றம் வழியாகச் செல்லும் போது மலைமேல் உள்ள அருள்மிகு காசிவிசுவநாதர் கோயிலைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.
மலையின் மேற்குப் பக்கம் உள்ள கற்படுக்கைகளைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.
மலையைச் சுற்றி வந்து கோயில் வாயிலில் நின்று வணங்கிக் கொண்டு கிரிவலத்தை நிறைவு செய்தோம்.
நகரத்தார் விடுதியில் காலைநேர வழிபாடு.
காலை உணவு.
காலை உணவு.
ஓய்வு.
மதிய உணவு.
திருப்பரங்குன்றம் நகரத்தார் விடுதியில் இருந்து மாலை 4.00 மணிக்கு மேல் பயணம் புறப்பட்டு அவனியாபுரம் விமானநிலையம் வழியாக வலையங்குளம் சென்று சேர்ந்தோம்.
அவனியாபுரத்தில் சாலையோரம் இருந்த மாமன்னர் மருதுபாண்டியர்கள் திருவுருவச் சிலைகளைக் கண்டு வணங்கிக் கொண்டோம். இரவு மணி 7.30 அளவில் வலையங்குளம் வந்து சேர்ந்தோம்.
வலையங்குளம் அன்பர் திரு மாரியப்பன் அவர்களும் நாட்டுக்கோட்டை நகரத்தார் ஒருவரும் யாத்திரிகர்களை வரவேற்றனர். சமுதாயக்கூடத்தில் யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தனர்.
இரவு உணவு.
ஒய்வு.
https://goo.gl/maps/KSHYHf3wNr6q6aM8A
இன்றைய பயணம் சுமார் 16 கி.மீ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக