புதன், 24 ஜூன், 2020

25.06.2014 காசி பாதயாத்திரை - 31ஆம் நாள் - ஆனி 11

பயணக் கட்டுரை - காசி பாதயாத்திரை - 
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்
6 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ....

இன்று 31ஆம் நாள் - ஆனி 11 (25.06.2014) புதன் கிழமை.
ஓசூர் நகரத்தார் சங்கம் திருமண மஹாலில் தங்கல். 
நகரத்தார் பலரும் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிம் ஆசி பெற்றுச் சென்றனர்.
யாத்திரிகர் அனைவரும் ஓய்வு.


பாதயாத்திரை பயணத் திட்டப்படி இன்று இங்கே தங்கியிருந்து நாளை காலையில் புறப்பட்டுச் செல்ல வேண்டும்.   இதனால் நாளைய பயணம்  ஓசூரில் இருந்து சுமார் 37 கி.மீ.  தொலைவில் உள்ள தாவரக்கரை சென்று சேர வேண்டும்.   இந்தத் தொலைவில் பாதிப் பயணத்தை இன்றே நடந்து சென்று அத்திப்பள்ளியில் தங்கிவிடலாம் எனக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் திட்டமிட்டார்.  இதற்காகக் காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்கள் பெங்களூரு திரு செல்லப்பன் மெய்யம்மமை ஆச்சி இவர்களைத் தொடர்பு கொண்டார்.  இவர்கள்  அத்திப்பள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கிச் செல்ல ஏற்பாடு செய்து கொடுப்பதாகக் கூறினர்.

இதனடிப்படையில், பயணத்திட்டத்தில் ஒரு சிறு மாறுதலாக, மதிய உணவு முடிந்தவுடன் வழக்கமான வழிபாடு செய்து கொண்டு ஓசூர் நகரத்தார் திருமண மண்டபத்தில் இருந்து புறப்பட்டோம்.

அத்திப்பள்ளியில் திரு செல்லப்பன் தம்பதியினர் யாத்திரிகர்களை வரவேற்று திருமண மண்டபத்தில் தங்கச் செய்து இரவு உணவு வழங்கிச் சிறப்புச் செய்தனர்.

இன்றைய பயணம் ஓசூர் - அத்திப்பள்ளி சுமார் 10 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக