tsunami clay rocks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tsunami clay rocks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 ஜூலை, 2020

11.07.2014 காசி பாதயாத்திரை - 47ஆம் நாள் - ஆனி 27

காசி பாதயாத்திரை - பயணக் கட்டுரை - பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.

இன்று 47ஆம் நாள் - ஆனி 27 (11.07.2014) வெள்ளிக் கிழமை.  
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று பசுபள்ளி (Bachupalli) ஸ்ரீ பாட்ட சூங்களம்மா கோயில் (Sri Baata Sunkalmma Temple)வந்து சேர்ந்து  தங்கியிருந்தோம்.

இன்று  அதிகாலை மணி 3.30 அளவில் காலை வழிபாட்டை முடித்துக்கொண்டு ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு கோயிலில் இருந்து புறப்பட்டோம்.  

நான்குவழிச் சாலை அமைக்கும்போது  சாலைகளின் நடுவே தடுப்புச் சுவர் அமைத்துள்ளனர்.  இதனால் அருகில் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால், நீண்ட தொலைவு சென்று திரும்பி வரவேண்டியுள்ளது.  இருசக்கர வாகன ஓட்டிகளும், விவசாயிகளும் அருகில் உள்ள இடங்களுக்குச் செல்ல உயிரைப் பணயம் ஒருவழிச்சாலையின் எதிர்புறம் பயணிப்பதைக் காண முடிந்தது. https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2018/03/blog-post_9.html


6.53 am
6.53 am
பியாபள்ளி (peapully) சோதனைச்சாவடி அருகே காலை 7.00 மணி அளவில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம்.
7.18 am
7.37 am

7.50 am
7.58 am
8.16 am
இரவு மழை பெய்துள்ளது.  இதனால் இதமான குளிர்ந்து காற்று வீசிக் கொண்டிருந்தது.  நடைப்பயணம் இனிமையாக இருந்தது.
8.41 am
8.41 am
8.50 am
பியாப்பள்ளி வழியாக ஏணுகுமாரி (Zphs school, Enugumarri, Mettupalle,) என்ற ஊரில் புறவழிச் சாலை அருகே உள்ள ஜில்லா பரிசத் பள்ளிக்கூடத்திற்குச் சென்று கொண்டிருந்தோம்.  காலை மணி 8.50 அளவில்  அந்தப் பள்ளிக்கூடத்தின் மாணவர்கள் விளையாட்டுத் திடலில் ஆங்காங்கே விளையாடிக் கொண்டிருந்தனர்.
8.52 am

8.55 am
கடல்கோள் பற்றிய இலக்கியப்பதிவுகள் தமிழில் நிறைய உள்ளன.  திருவிளையாடற் புராணமானது மதுரையுடன் தொடர்புடைய நான்கு கடல்கோள்களைப் பதிவு செய்துள்ளது.  கடல்கோளால் உண்டான கடல்வெள்ளம் (சுனாமி) கரையைக் கடந்தபோது உண்டான கடற்களிமண் இறுகிப் பாறைகளாகி உள்ளன.  இந்தக் கருத்திற்குச் சான்றாக, ஆந்திராவில்  ஏணுகுமாரி மற்றும் மெ(மே)ட்டுப்பள்ளி ஊர்களில் காணக்கிடைக்கும் பாறைகள் உள்ளன.  https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/07/blog-post_91.html


9.26 am
காலை மணி 9. 10 அளவில்  ஏணுகுமாரி (Zphs school, Enugumarri, Mettupalle,) ஜில்லா பரிசத் பள்ளிக் கூடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  மாணவர்களுக்கு மிகவும் நல்லமுறையில் மதியஉணவு வழங்கினர்.

2.50 pm
வகுப்புகள் முடிந்து மாணவர்கள் பள்ளியை விட்டுச் செல்லும் வரை மரத்தடியில் தங்கியிருந்தோம்.   பள்ளிமுடிந்து மாணவர்கள் சென்ற பின்னர் வகுப்பறைகளில் தங்கினோம்.  பாம்புகள் நிறைய உண்டு.  எனவே கவனமாகத் தங்கியிருங்கள் என்று ஆசிரியர்கள் கூறிச் சென்றனர்.  எனவே யாத்திரிகர் அனைவரும் அவரவருடைய டார்ச்லைட்களை எடுத்து வைத்துக் கொண்டு, வகுப்பறையின் சன்னல் கதவுகளை யெல்லாம் மூடிவிட்டுத் தூங்கினோம்.  சிலர் பள்ளிக்கூடத்தின் மேல்தளத்திற்குச் சென்று படுத்துத் தூங்கினர்.

நாள் முழுவதும் மின்சாரம் இல்லை.  கும் இருட்டில் இரவு கழிந்தது.  அலைபேசிகளுக்குப் பேட்டரி சார்ஸ் போடமுடியாமல் போனது.  டார்ச்லைட் வெளிச்சத்தில் இரவு உணவு.

ஓய்வு.


https://goo.gl/maps/BTK2aDAMd7382hgL7
இன்றைய பயணம் சுமார் 22கி.மீ .
கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


வியாழன், 18 ஜூன், 2020

வட்டவட்ட வளையங்களைக் கொண்ட பாறை, Liesegang rings

வட்டவட்ட வளையங்களைக் கொண்ட பாறை


எப்போதும் வென்றான் அருள்மிகு உஜ்ஜினி மாகாளியம்மன் கோயிலை அடுத்து  அருள்மிகு சோலைசாமி கோயிலுக்குச் செல்லும் வழியில் கல்லினால் ஆன செக்குகள் பயனற்றுக் கிடக்கின்றன.  இந்தச் செக்குகள் சுமார் 6அடி ஆழத்திற்குமேல் புதைக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவற்றை அப்புறப்படுத்த முடியாமல் அப்படியே கிடக்கின்றன.  இதைப் பயன்படுத்திய வணிகர் குடும்பங்களும் இதைப் பராமரிக்க முடியாமல் அப்படியே விட்டுவைத்துள்ளனர்.


ஒரு மரக்கிளையைக் குறுக்கா வெட்டிப் பார்த்தால், அதில் வளையம் வளையமாகத் தெரியும்,  எத்தனை வளையங்கள் உள்ளன என்பதைக் கொண்டு அந்த மரத்தின் வயதைக் கணக்கிட்டுச் சொல்கின்றனர்.  கிரானைட் பாறையால் ஆன இந்தக் கல் செக்கில், மரத்தில் உள்ள வளையங்கள் போன்று வளையங்கள் இருந்தன.  (Liesegang rings observed in Lakha Red Granite Stone ?) 

சிகப்பு கிரானைட் கல்லில் இதுபோன்ற வளையங்கள் எப்படி உண்டாகியிருக்கும்?  
இந்தக் கல்லில் உள்ள வளையங்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சிரியமாக இருந்தது எனக்கு. 

மேலேயுள்ள கிரானைட் பாறையில் உள்ள வளையங்களைப் போன்று பல வட்டவட்ட வளையங்களைக் கொண்ட பொக்குப்பாறை ஒன்று சாலையோரம் கிடந்தது.  அதன் படத்தைக் கீழே இணைத்துள்ளேன்.

tree fossils, tsunami tree fossils,

(Liesegang rings observed in sedimentary rocks made of Tsunami clay ?)

இந்தக் கல்லானது இறுகிப் பாறையாக மாறுவதற்கு முன்பு பாறைக்குழம்பாக இருக்கும்போதே,  வட்டமான வளையாங்களைக் கொண்ட ஏதோ ஒன்று இருந்திருக்கிறது.  அதன்மேல் பாறைக்குழம்பு படிந்து இறுகிக் கிரானைட் பாறையாக மாறியுள்ளது.  இந்த வட்டவடிப் பொருளானது ஒரு தாவரத்தின் படிமமாக இருக்குமோ? என்ற ஐயம் எனக்கு.  (An Aztec sandstone with Liesegang rings ?)

tree fossils, tsunami tree fossils,

புவியிலாளர்கள் யாரேனும் இந்தக் கற்களை அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து சொன்னால் நல்லது.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்