வியாழன், 9 ஜூலை, 2020

10.07.2017 அறுபடைவீடு - பாதயாத்திரை - 33ஆவது நாள், ஆனி 26

பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி ஆகிய நான்கு திருத்தலங்களிலும் இறைவனை வழிபடும் பேறு பெற்றோம்.

இன்று  33ஆவது நாள், ஆனி 26 (10.07.2017) திங்கள் கிழமை.
அதிகாலை மணி 2.30க்கு வழக்கம்போல் வழிபாடு செய்து ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுப்  பழனியில் இருந்து சுவாமிமலைக்கான பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.


சத்திரபட்டி அருகே சாலையோரம் காலை நேரத்தில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம்.

காலை மணி 7.50 அளவில் விருப்பாச்சி மலையைக் கடந்து சென்றோம்.  முன்பெல்லாம் விருப்பாச்சி மலைக்குன்றைக் கடந்து செல்வது “விருப்பாச்சி ஏற்றம்” என்று யாத்திரிகர்களால் சிறப்பித்துப் பேசப்படும். இப்போது, மலையை வெட்டிச் சாலையை அகலப்படுத்தியுள்ளனர்.  எனவே வாகனங்களும் சிரமம் இல்லாமல் வேகமாகச் செல்கின்றன.  நடந்து விருப்பாச்சிமலையைக் கடந்து செல்வதும் எளிதாக உள்ளது.
விருப்பாச்சி மலையை வெட்டியுள்ள இடங்களில், பிரளய காலத்தில் பாறைகள் பிளவு பட்டுப் புடைபெயர்ந்து இருப்பதையும்,  கடல்கோளால் உண்டான கடல்வெள்ளத்தினால் அடித்துவரப்பட்ட கடற்களிமண் படிந்து இறுகிப் பொக்குப் பாறைகளாக மாறியுள்ளதையும் காண முடிந்தது.


விருப்பாச்சிப் பாறைகளைப் போன்றே அமெரிக்காவிலும் பாறைகள் கண்டறியப்பட்டுள்ளன.  அமெரிக்காவில்  (northern Kentucky, USA) இந்தவகைப் பாறைகள் மிகப்பெரிய நிலநடுக்கங்களைத் தொடர்ந்து உண்டான சுனாமியினால் உருவானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.  
தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும் திருவிளையாடற் புராணத்திலும் கடல்கோளால்கள் பற்றிய பதிவுகள் உள்ளன.  எனவே விருப்பாச்சியில் உள்ள பாறைகள் கடல்கோளின் போது பெரும் மாற்றங்களை அடைந்துள்ளன என்பது உறுதி.   முறையான ஆய்வுகள் புவியியலாளர்கள் மேற்கொள்ளப்பெற வேண்டும். https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/02/9.html
https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2018/12/6.html

வழியில் விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் நினைவு மணிமண்டபம் கண்டு வணங்கிக் கொண்டோம்.  https://ta.m.wikipedia.org/wiki/விருப்பாச்சி_கோபால்



விருப்பாச்சி அருள்மிகு வண்ண கருப்பணசாமி திருக்கோயில் வாயில் அருகே காலை உணவு.  வல்லக்கோட்டை முருகன் பாதயாத்திரை குழுவினர் சார்பில் காலை உணவு வழங்கிச் சிறப்பித்தனர்.

அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில் அருகேயுள்ள குன்றின்மேல் உள்ள கோயிலைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.


காலை மணி 10.00 அளவில் அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயிலுக்கு எதிரே உள்ள “பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிதிருக்கோயில் பாதயாத்திரை பக்தர்கள் தங்குவதர்கான விடுதிக்கு வந்து சேர்ந்து தங்கினோம்.  

வல்லக்கோட்டை முருகன் பாதயாத்திரை குழுவினர் சார்பில் வடைபாயாசத்துடன் மதியஉணவும்,  இரவு சிற்றுண்டியும் வழங்கிச் சிறப்பித்தனர்.


https://goo.gl/maps/KKZBbiF6JdvbRZR76
இன்றைய பயணம் சுமார் 25 கி.மீ.


குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/07/09072017-32-25.html

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக