வெள்ளி, 17 ஜூலை, 2020

18.07.2017 அறுபடைவீடு - பாதயாத்திரை - 41 ஆவது நாள், ஆடி 2

பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி ஆகிய நான்கு திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். அடுத்து பழனியில் இருந்து சுவாமிமலைக்குப் பாதயாத்திரை செல்லும் வழியில் .....

இன்று  41 ஆவது நாள், ஆடி 2 ( 18.07.2017) செவ்வாய்க் கிழமை.
காலை 2.30 மணிக்கு வழிபாட்டை முடித்துக் கொண்டு வழக்கம்போல் ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு, தோகூர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் இருந்து யாத்திரையைத் தொடர்ந்தோம். 

திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள புதுச்சத்திரத்திரம் அருள்மிகு முனீசுவரர் கோயிலுக்கு காலை மணி 7.00 அளவில் வந்து சேர்ந்தோம்.


வழியில்...
அதிகாலை 2.45 மணி அளவில், அரசன்குடியில் கரிகாலனால் கட்டப்பெற்ற அருள்மிகு கருணாம்பிகை உடனுறை மருதபுரீசுவரர் மற்றும் ஸ்ரீ காலபைரவர் கோயிலைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.



வழியில் வயல்வெளியில் ஆனந்தக் குளியல்.


பூண்டிமாதா சர்ச் வளைவு.  

புதுச் சத்திரம் அருள்மிகு முனீசுவரர் திருக்கோயில் வளாகத்தில் காலை உணவு.
ஓய்வு. 

அன்பர் ஒருவர் அடியார்களுக்கு இளநீர் வழங்கி உபசரித்தார்
இரவு வழிபாடு
ஓய்வு..


மாலைநேரத்தில் புதுச்சத்திரம் அருள்மிகு முனீசுவரரை வழிபாடு செய்து கொண்டோம்.
பழனியில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில்  திருக்காட்டுப்பள்ளி யில்  பழனியாண்டவரை நேரில் கண்டவரைக் கண்டோம். ( https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/07/d.html )
D. நாகராசன்  ஐயா அவர்கள் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றார்.  அடியார்கள் தங்குவதற்குத்தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்.


https://goo.gl/maps/sNxgcYTuTwd4nvva7
இன்றைய பயணம் சுமார் 16 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக