ஞாயிறு, 5 ஜூலை, 2020

06.07.2014 காசி பாதயாத்திரை - 42ஆம் நாள் - ஆனி 22

காசி பாதயாத்திரை - பயணக் கட்டுரை - 
பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.

இன்று 42ஆம் நாள் - ஆனி 22 (06.07.2014) ஞாயிற்றுக் கிழமை.  
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று ஆந்திராவில் கொடுஊரு(Gutturu)வந்து தங்கியிருந்தோம்.

இன்று  காலை 3.25 மணிக்கு காலை வழிபாடை முடித்துக்கொண்டு ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு கொடுஊருவில் இருந்து புறப்பட்டோம்.

5.35 am

6.05 am

6.36 am

6.38 am
வழியில், காலை மணி 6.40 அளவில்  ஏரம்பள்ளி பேருந்துநிறுத்தத்தில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.

6.52 am

6.59 am

7.16 am
Penubolu
8.22 am

8.25 am
காலை மணி 8.30க்கு பெனுபொளு (Penubolu) என்ற ஊரின் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து காலை உணவு.


8.31 am
நேற்று இந்நேரம் அலைபேசி காணாமல் போனபோது இருந்த கவலை இப்போது சிவப்பாவிடம் காணப்படவில்லை. சமையற் கலைஞர், காளைராசன், சிவப்பா, அன்னதான வாகன ஓட்டுனர் ஆகிய நால்வரும் படம் எடுத்துக் கொண்டோம்.
9.34 am
காலை உணவை முடித்துக் கொண்டு நடந்து செல்லும்போது,  குருசாமி பச்சைக்காவடி அவர்களைத் தாண்டிச் சென்ற வண்டி ஒன்று நின்றது.  அதிலிருந்து அடியார் ஒருவர் குடும்பத்தினருடன் இறங்கி வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களின் பாதங்களை வணங்கினார்.  குருசாமி அவர்கள் அந்தக் குடும்பத்தினரை ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார்.


9.58 am
அந்த அன்பரின் குடும்பத்தினரும் யாத்திரிகர்களுடன் சேர்ந்து நடந்து வந்தனர்.  கங்கனபள்ளி என்ற ஊரின் அருகே பெருமாள் கோயிலுக்கு 10.00 க்கு வந்து சேர்ந்தோம்.


10.26 am
கங்கனபள்ளி கோயில் நல்ல வசதியாகவும் சுத்தமாகவும் இருந்தது.  பழமையான கல்வெட்டுகளும், குடமுழுக்கு நடத்திய கல்வெட்டுகளும் நிறைந்து இருந்தன.

01.42 pm

கங்கனபள்ளி கோயில் வளாகத்தில் மதிய உணவு.
மதிய உணவிற்குப் பிறகு  2.00 மணிக்கு யாத்திரை புறப்பட்டோம்.
2.05 pm


3.12 pm

3.14 pm

4.07 pm

4.10 pm
மாலை மணி 4.10 அளவில் சாலையோரம் அமர்ந்து ரொட்டி தேநீர் சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.

4.42 pm
மரூரு என்ற ஊருக்கு   மாலை மணி 5.00 க்கு வந்து சேர்ந்தோம். இங்குள்ள பள்ளி வளாகத்தில் தங்கினோம்.


https://goo.gl/maps/DzcTRyRm3Bcjt8cV6
இன்றைய பயணம் சுமார் 34  கி.மீ .

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக