வியாழன், 23 ஜூலை, 2020

24.07.2014 காசி பாதயாத்திரை - 60ஆம் நாள் - ஆடி 8

காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  
நேற்று செகந்திராபாத்  ஊரில் உள்ள குஜராத் சேவாமந்திர் வந்து சேர்ந்து தங்கியிருந்தோம். 

இன்று 60ஆம் நாள் - ஆடி 8 (24.07.2014) வியாழக் கிழமை.

ஹைதராபாத் செகந்திராபாத் நகரங்களில் வசிக்கும் நகரத்தார் பலரும் வந்து குருசாமி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.  

செகந்திராபாத்  ஊரில் உள்ள குஜராத் சேவாமந்திரில் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களின் நண்பர் திரு சரவணமுத்து ஐயா அவர்கள் செய்து கொடுத்திருந்தார்.  இரவு உணவும் அவரது உபயம்.

குஜராத் சேவாமந்திரில் தங்கி இருந்தோம்.  குஜராத் சேவாமந்திர் பொறுப்பாளர்கள் பலரும் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.  அடுத்து வரும் 2015ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரையின் போதும் யாத்திரிகர்கள் அனைவரும் இங்கேயே வந்து தங்கிச் செல்ல வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.  குருசாமி அவர்களும் அந்த வேண்டுகோளை அன்புடன் ஏற்றுக் கொண்டு 2015ஆம் வருடமும் யாத்திரையின் போது இங்கே வந்து தங்கிச் சென்றுள்ளார்.

யாத்திரிகர்களுக்கு முழு ஓய்வு.
குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்குச் சிறிதும் ஓய்வில்லாமல் போனது.  அன்பர்கள் பலரும் வந்து ஆசிபெற்றுச் சென்றனர்.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக