வெள்ளி, 24 ஜூலை, 2020

25.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 48 ஆவது நாள், ஆடி 9

அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி 5) சுவாமிமலை  ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.  சுவாமிமலையில் இருந்து வைத்தீசுவரன்கோயில் பாண்டிச்சேரி சிதம்பரம் காஞ்சிபுரம் வழியாகத் திருத்தணிகைக்குப் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம்.

வைத்தீசுவரன் கோயிலில் வழிபாடு முடித்து, நேற்று பிஎல்.ஏ. திருமண மண்டபத்தில் தங்கியிருந்தோம். 
 
இன்று  48 ஆவது நாள், ஆடி 9 ( 25.07.2017) செவ்வாய்க் கிழமை.
அதிகாலை 2.20 மணிக்கு தினசரி வழிபாட்டை முடித்துக் கொண்டு, ரொட்டி தேநீர் சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.  
வழியில் சீர்காழி அன்பர் ஒருவர் அவரது காரில் ரொட்டியும் தேநீரும் எடுத்து வந்து யாத்திரிகர்களுக்கு வழங்கிச் சிறப்புச் செய்தார்.










வரும் வழியில் சிதம்பரத்தில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் மடாலயம் வாயிலில் நின்று வணங்கிக் கொண்டோம்.

காலை 9.00 மணிக்கு சிதம்பரம் காவேரி ஹால் வந்து சேர்ந்தோம். 
காலை மணி 9.25க்கு சிற்றுண்டி.
ஓய்வு.

மாலை மணி 5.00க்கு  தினசரி வழிபாடு.
காசிஸ்ரீ கலியபெருமாள் அவர்கள் சிதம்பரம் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றார். 
சில யாத்திரிகர்கள் குருசாமி அவர்களின் அனுமதி பெற்று அருள்மிகு சிவகாமி உடனாய நடராசர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து வந்தனர்..
காசிஸ்ரீ கலியபெருமாள் அவர்களும் யாத்திரிகர்களுடன் கோயிலுக்கு வந்து வழிபாடும் செய்து கொண்டார்.


நாட்டியப் பேரொளி - 
ஆடலில் யார் சிறந்தவர் என அன்னைக்கும் அப்பனுக்கும் போட்டி.  
ஆட்டத்தின் போது கீழே விழுந்த காதணியை ஆடிக்கொண்டே தன் காலால் எடுத்துத் தன் காதில் மாடிக் கொண்டே ஆடினான் அப்பன்.  தலைவரை காலைத் தூக்கியாட நாணம் கொண்டு அவ்வாறு ஆடுவதைத் தவிர்த்தாள் அன்னை.  இதனால் அன்னை ஆட்டத்தில் தோல்வி என்று தீர்ப்பு ஆனாது.   பெண்களுக்கே உரிய நாணத்தினால் உண்டான இந்தத் தோல்வியை அன்னையின் அடியார்கள் ஒத்துக் கொள்வார்களா?  
இதோ அப்பனைப் போல் நாங்களும் ஆடிக் காட்டுவோம் என்று ஆடிக்காட்டுகிறாள் ஆடல்வல்லாள் ஒருத்தி.   
வலதுகாலால் காதைத் தொட்டு ஆடல்வல்லாள் ஆடும் காட்சி.   சிதம்பரம் கோயில் கோபுரவாயில் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.

ஆடல்வல்லாளைக் கோபுரவாயில் தூணிலும், ஆடல்வல்லானையும் சிவகாமித் தாயையும் கோயில் உள்ளேயும்,
ஸ்ரீ புண்டரீகவல்லி சமேத அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாளையும் வழிபாடு செய்து முடிந்துக் காவேரி மண்டபத்திற்குத் திரும்பினோம்.
இரவு 8.00 மணிக்கு உணவு.
ஓய்வு.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக