புதன், 22 ஜூலை, 2020

23.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 46 ஆவது நாள், ஆடி 7

பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி 5) சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.  அடுத்து சுவாமிமலையில் இருந்து வைத்தீசுவரன்கோயில் பாண்டிச்சேரி சிதம்பரம் காஞ்சிபுரம் வழியாகத் திருத்தணிகை செல்வதாகப் பயணத்திட்டம்.

இன்று  46 ஆவது நாள், ஆடி 7 ( 23.07.2017) ஞாயிற்றுக்  கிழமை.
திருவாலங்காட்டில் இருந்து வைத்தீசுவரன் கோயிலுக்கு இன்றைய பயணம்.
காலை 2.20 மணிக்கு வழிபாடு முடிந்து  ரொட்டியும் ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு யாத்திரை தொடங்கியது.
வழியில் ரொட்டி தேநீர்.
வழியில் காலை உணவு.
10 மணி அளவில் வைத்தீசுவரன் கோயில் பிஎல்.ஏ. மண்டபத்தைத் அடைந்தோம்.
ஓய்வு 
மதிய உணவு
ஓய்வு
மாலை மணி 5.00 அளவில் அன்பர் ஒருவர் அடியார்கள் அனைவருக்கும் இளநீர் வழங்கினார்.  
மாலை மணி 6.00 அளவில் அருள்மிகு தையல்நாயகி உடனாய வைத்தீசுவரன் வழிபாட்டிற்காகக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர் 
அனைவரையும் அழைத்துக் கொண்டு  அழைத்துச் சென்றார்.
சுவாமியையும் அம்பாளையும் அருகில் நின்று அமைதியாக வழிபடும் பேற்றினைப் பெற்றோம்.
கோயிலில் குருசாமி அவர்களுக்கு மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தார்கள்.
குருசாமி அவர்கள் யாத்திரிகர் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கினார்.
ஆலயத்தில் பல அன்பர்கள் குருசாமியை வணங்கி ஆசி பெற்றனர்.  அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்கினார்.
8.00 மணிக்கு மண்டபம் திரும்பினோம்.  
இரவு வழிபாடு
உணவு
ஓய்வு.








https://goo.gl/maps/N9Jr4cJz3rnyNYoN6
இன்றைய பயணம் சுமார் 31 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக