காசிக்குக் காஞ்சி மகாப் பெரியவர் பாதயாத்திரையாக, 1934 ஆம் வருடம் சென்றுள்ளார்....
1934-ஆவது வருடம் ஏப்ரல் மாதம் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் ஸ்வாமிகள் செகந்தராபாத்திலிருந்து புறப்பட்டு மேச்சல், தூப்ரான், நரசிங்கி, பிக்னூர், காமரெட்டிபேட், இன்டல்வாய், டே ராஜபள்ளி மார்க்கமாகக் கோதாவரிக் கரையிலுள்ள சொண்ணா என்னும் இடத்திற்கு மே மாதம் 5-ந் தேதி சென்றுள்ளனர்.
காஞ்சி மகாப் பெரியவர் சென்ற அதே வழித்தடத்தில், வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் காசிபாதயாத்திரையும் அமைந்து இருந்தது.
--------------------------------------------------------
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை -
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை -
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று பிக்னூரில் உள்ள சித்தராமேசுவரம் கோயிலுக்கு வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.
இன்று 65ஆம் நாள் - ஆடி 13 (29.07.2014) செவ்வாய்க் கிழமை.
தினசரி வழிபாட்டை முடித்துக் கொண்டு ரொட்டியும் ஹார்லிக்சும் சாப்பிட்டுவிட்டு அதிகாலை மணி 3.55 க்கு சித்தராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு யாத்திரையை தொடர்ந்தோம்.
5.26 am
வழியில் சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்கில் காலை 6.30 மணிக்கு ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
காஞ்சி மகாபெரியவர் 1934ஆம் வருடம் மேற்கொண்ட காசி பாதயாத்திரையின்போது காமரெட்டி (Kamareddy) ஊரின் வழியாகச் சென்றார் என்று அவரது பயணக் குறிப்பில் உள்ளது. யாத்திரிகர்கள் காமரெட்டி ஊர் வழியாகச் செல்லாமல், காமரெட்டி புறவழிச் நெடுஞ்சாலை வழியாகச் சென்றோம். இதனால் பயணதூரமும் பயண நேரமும் கூடுதலாகின.
8.15 க்கு காலை உணவு.
மதியம் 1.00 மணிக்கு சதாசிவநகர் என்ற ஊரை அடைந்து விட்டோம்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அன்பரின் “ஸ்ரீ வாணி வித்யாலயம்” பள்ளிக் கூடத்தில் தங்கினோம்.
மதிய உணவு.
ஓய்வு.
01.11pm
https://goo.gl/maps/uiNutVoBMH3vAUaS8
இன்றைய பயணம் சுமார் 38 கி.மீ.
இன்றைய பயணம் சுமார் 38 கி.மீ.
காஞ்சி மகாப் பெரியவரின் திருவருளும், குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக