அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர் 4) பழனி 5) சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில், வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் வழிபாடு செய்து கொண்டு நேற்று ஆனையாம்பேட்டையில் உள்ள தோன்பாஸ்கோ பள்ளிக்கூடத்தில் வந்து தங்கி இருந்தோம்.
இன்று 50 ஆவது நாள், ஆடி 11 ( 27.07.2017) வியாழக் கிழமை.
அதிகாலை 2.20 மணிக்கு யாத்திரை தொடங்கியது.
காலை மணி 5.30க்குக் கையில் வைத்திருந்த குடிதண்ணீர் தீர்ந்து விட்டது.
காலையில் அன்னதானவண்டி வருவதற்கும் கால தாமதம் ஆனது.
மிகவும் தாகமாக இருந்தது.
சில யாத்திரிகர்கள் முன்னே சென்றுவிட்டனர்.
நாங்கள் சில யாத்திரிகர்கள் பின்னே மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தோம்.
காலையில் அன்னதானவண்டி வருவதற்கும் கால தாமதம் ஆனது.
மிகவும் தாகமாக இருந்தது.
சில யாத்திரிகர்கள் முன்னே சென்றுவிட்டனர்.
நாங்கள் சில யாத்திரிகர்கள் பின்னே மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தோம்.
நடந்து சென்று கொண்டிருக்கும்போது சுமார் 7.00 மணி அளவில் அன்னதான வண்டி வருவதைப் பார்த்து நிறுத்தினோம்.
எங்களைப் பார்த்ததும் அன்னதான வண்டியைச் சாலையோரம் ஒதுக்கினர்.
ஆனால் வண்டியை நிறுத்தாமல் சென்று விட்டனர்.
காலை மணி 7.30க்கு குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அன்பரான கடலூர் திரு முத்தையா அவர்களின் வீட்டிற்குச் சென்று சேர்ந்தோம்.
அங்கே சென்ற பின் அனைவருக்கும் ரொட்டியும் தேநீரும் வழங்கினர்.
வீட்டின் உள்ளேயும், மாடியில் உள்ள வீட்டிலும் யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்திருந்தனர்.
அங்கே சென்ற பின் அனைவருக்கும் ரொட்டியும் தேநீரும் வழங்கினர்.
வீட்டின் உள்ளேயும், மாடியில் உள்ள வீட்டிலும் யாத்திரிகர்கள் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்திருந்தனர்.
காலை உணவு.
சாத்துக்குடி பழம் வழங்கப்பட்டது.
மாலையில் திரு முத்தையா அவர்களது இல்லத்தில் வழிபாடு.
காலை மதியம் மாலை இரவு என எல்லா நேரமும் சிறப்பானதொரு விருந்தோம்பல்.
ஓய்வு.
https://goo.gl/maps/DKbA1LrVc4DQx9Wy7
இன்றைய பயணம் சுமார் 24 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக