செவ்வாய், 7 ஜூலை, 2020

08.07.2017 அறுபடைவீடு - பாதயாத்திரை - 31ஆவது நாள், ஆனி 24

பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று  31ஆவது நாள், ஆனி 24 (08.07.2017) சனிக் கிழமை.
பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பகவிநாயகரை வழிபட்டு 08.06.2017 அன்று பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை, 2) திருப்பரங்குன்றம், 3) திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களில் வழிபாடு செய்துவிட்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் நேற்று  ஒட்டஞ்சத்திரம் குழந்தை வேலப்பர் ஆலயத்திற்கு எதிரே உள்ள பழனி பாதயாத்திரை அடியார்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்தோம்.

அதிகாலை மணி 3.00 க்கு வழக்கமான காலைநேர வழிபாட்டை முடித்துக் கொண்டு ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுப் பாதயாத்திரை பயணத்தைத் தொடர்ந்தோம்.

பழனியை நெருங்க நெருங்க இரவு நேரத்தில் மின்னொளியில் பழனிமலையின் அழகு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.  

வழியில் சுமார் 6.30 மணி அளவில் ரொட்டி தேநீர் சாப்பிட்டுவிட்டு நடையைத் தொடர்ந்தோம்.

காலை மணி 9.30 அளவில் பிஎல். ஏ. மண்டபத்தை அடைந்து தங்கினோம்.
ஓய்வு.

மொட்டை போடுதல் -
அறுபடைவீடு பாதயாத்திரையில் முருகபெருமானின் ஆறுபடைவீடுகளில் இதுவரை நான்கு படைவீடுகளின் தரிசனம் செய்து உள்ளோம் இதில்  முதலாவதாக பழமுதிர்சோலை. யாத்திரிகர்கள் யாரும் மொட்டை போட்டு கொள்ளவில்லை.  இரண்டாவதாகத்  
திருப்பரங்குன்றம்.    குருசாமி அவர்களும் முரளிதரன்ஜி மற்றும் சில யாத்திரிகர்கள் மொட்டை போட்டு கொண்டனர். மூன்றாவதாக
திருச்செந்தூர்.   யாத்திரிகர்கள் சிலர் மட்டும் மொட்டை போட்டு கொண்டனர்.  

நான்காவதாக பழனி.   குருசாமி பச்சைக்காவடி மற்றும் யாத்திரிகர்கள் அனைவரும் (காசிஶ்ரீ அங்கமுத்து ஐயா தவிர) மொட்டை போட்டு கொண்டோம்.
பழனியில் முருகப்பெருமான் மொட்டையடித்துத் தலையிலும் கழுத்திலும் உத்திராட்சம் அணிந்து இருப்பார்.  முருகப்பெருமானே மொட்டையாண்டியாகப் பழனியில் எழுந்தருளுகின்ற காரணத்தினால், பழனியல் அடியார்கள் மொட்டை போட்டுக்கொள்ளுதல் சிறப்பு.
🙏🙏🙏

மாலை மணி 3.00 க்கு மேல் யாத்திரிகர் சிலர்
 கிரிவலம் சென்றோம் செல்லும் வழியில் கிரிவலப்பாதையில் உள்ள 🙏சாது மடத்தில்🙏
அந்தி நேர பூஜை 
நடைபெற்று கொண்டு இருந்தது அதில் கலந்து கொண்டு பூஜை முடிந்தவுடன் அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார்கள் மிகவும் சிறப்பான ஒரு பூஜை🙏🙏 
மற்றும் இந்த மடத்தின் சிறப்பு இன்னவென்றால் 
🙏பழனி தண்டாயுதபாணிக்கு🙏 அபிஷேகம் செய்ய படும் பால் எத்தனை லிட்டராக இருந்தாலும் சரி அது இந்த மடத்தில் இருந்து தான் செல்கிறது என்பது தான் அது. 🙏🙏
இப்படி ஒரு சிறப்புமிக்க மடத்திற்குள் சென்று வருவதே பெறும் பாக்கியம் அதிலும் பூஜையில் கலந்து கொண்டு பிரசாதம் பெறுவது என்பது மிகப்பெறும் புண்ணியம் அது எங்கள்🙏குருஜி 🙏மூலம் தான் நடந்தது அவர்கள் எங்களுக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்க வில்லை என்றால் இது நடந்தது இருக்காது எங்கள் 🙏குருஜிக்கு🙏 நன்றி

மாலை மணி 6.30 க்கு மாலைநேர வழிபாடு.
இரவு மணி 8.00க்கு இரவு உணவு.
ஓய்வு.

https://goo.gl/maps/VGgZF1DskkgLbNXy6
இன்றைய பயணம் சுமார் 26 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக