பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
இன்று 29ஆவது நாள், ஆனி 22 (06.07.2017) வியாழக் கிழமை.
பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பகவிநாயகரை வழிபட்டு 08.06.2017 அன்று பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை, 2) திருப்பரங்குன்றம், 3) திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களில் வழிபாடு செய்துவிட்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் நேற்று கொடைரோடு வந்து தங்கியிருந்தோம்.
இன்று காலை 2.45 மணிக்குக் கொடைரோடு பயணியர் விடுதியில் இருந்து யாத்திரை புறப்பட்டோம்.
தினமலரில் பாதயாத்திரை தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது. யாத்திரிகர் அனைவரும் தினமலர் வாங்கிப் படித்தனர்.
காலை 9..00 மணியளவில் நகரத்தார் திருமண மண்டபத்தை அடைந்தோம். நகரத்தார் வந்து வரவேற்று உபசரித்தனர்.
காலை உணவு.
ஓய்வு.
மாலை 6.00 மணிக்கு மண்டபத்திற்கு அருகில் உள்ள அன்பர் ஒருவர் அவரது இல்லத்திற்கு யாத்திரிகர்களை வரவேற்றார். அவரது வீட்டிற்குச் சென்று வழிபாடு செய்தோம். அங்கே மிக்சர் பிஸ்கட் தேநீர் சாப்பிட்டோம்.
இரவு 7 மணிக்கு இரவுநேர வழிபாடு.
ஓய்வு.
https://goo.gl/maps/8674otFkHWWqarFF7
இன்றைய பயணம் சுமார் 24 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக