பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர் 4) பழனி ஆகிய நான்கு திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். அடுத்து பழனியில் இருந்து சுவாமிமலைக்குப் பாதயாத்திரை செல்லும் வழியில் .....
இன்று 38 ஆவது நாள், ஆனி 31 ( 15.07.2017) சனிக் கிழமை.
அதிகாலை 2,30 மணிக்கு மணிவேல் முருகன்கோயிலில் இருந்து வழக்கம்போல் வழிபாடு செய்து ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுப் பாதயாத்திரை புறப்பட்டு சுமார் 7.30 மணிக்குத் திருச்சியை அடைந்தோம்.
நகரத்தார் மண்டபத்தில் தங்கினோம்.
காலைச் சிற்றுண்டியும் தேநீரும் அருந்தினோம்.
மண்டபத்தில் சமையல்கூடம் இல்லை.
இக் காரணத்தினால் தங்கமிடத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
எனவே, உறையூர் வெக்காளியம்மன் கோயிலுக்கு எதிரில் உள்ள ஸ்ரீதேவி திருமண மண்டபத்திற்கு 2.00 மணிக்கு வந்து சேர்ந்தோம்.
அருள்மிகு வெக்காளியம்மன்கோயில் எதிரேயுள்ள ஸ்ரீதேவி திருமண மண்டபத்தில் தங்கியிருக்கும் போது, பேராசிரியர் சபேசன் அவர்கள் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசிபெற்றார். அழகப்பா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இராமேசுவரம் காசி பாதயாத்திரையின் போதும் திருச்சியில் யாத்திரிகர்கள் தங்கியிருக்கும்போது வந்திருந்து வாழ்த்திச் சென்றார். இந்த அறுபடைவீடு பாதயாத்திரையின் போது இன்றும் நேரில் வந்திருந்து அடியேனை வாழ்த்திச் சென்றார்.
மதிய உணவு - அன்பர் ஒருவர் உபயமாக வழங்கிச் சிறப்பித்தார்.
ஓய்வு.
மாலைநேரத்தில் அருள்மிகு வெக்காளியம்மன் தரிசனம். மேற்கூரை இல்லாமல் வெயிலில் காய்ந்து அருள்பாலிக்கின்றாள் அன்னை வெக்காளியம்மன்.
இரவு பிஎல்.ஏ. டி.வி.எஸ். ஷோரூமில் (PL.A. - TVS ShowRoom) இரவு நேர வழிபாடு. அடியார்களுக்குக் காவித் துண்டு அணிவித்துச் சிறப்புச் செய்தனர். வழிபாடு முடிந்தவுடன் யாத்திரிகர்களுக்குச் சிறப்பு விருந்து வழங்கிச் சிறப்புச் செய்தனர். பெருவணிகர் பலரும் வந்திருந்து வழிபாட்டிலும் விருந்திலும் கலந்துகொண்டனர்.
ஸ்ரீதேவி திருமண மண்டபத்திற்குத் திரும்பினோம்.
ஓய்வு.
https://goo.gl/maps/J2H8r45XWYvataDk7
இன்றைய பயணம் சுமார் 24 கி.மீ.
இன்றைய பயணம் சுமார் 24 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக