காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இன்று 50ஆம் நாள் - ஆனி 30 (14.07.2014) திங்கள் கிழமை.
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று ஆந்திராவில் உளிண்டகொண்டா பள்ளிக்கூடத்தில் வந்து தங்கியிருந்தோம்.
இன்று அதிகாலை மணி 3.20 அளவில் காலை வழிபாட்டை முடித்துக்கொண்டு ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு பாதயாத்திரை புறப்பட்டோம்.
6.16 am
வழியில் பெத்ததெருக்குரு என்ற ஊரில் சாலையோரும் பாரத் கேஸ் நிறுவனம் உள்ளது.
6.50 க்கு பாரத் கேஸ் நிறுவன வளாக வாயில் அருகே ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.
6.55 am
பாரத்கேஸ் மொத்தமாக டேங்கரில் வாங்கிச் செல்வதற்காகத் தமிழ்நாட்டில் இருந்து பல லாரிகள் வந்து வரிசையில் நின்றன. தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த லாரி ஓட்டுநர்கள் பலரும் இராமேசுவரத்தில் இருந்து காசிக்குப் பாதயாத்திரை சென்று கொண்டிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்து பெருமிதம் கொண்டனர்.
6.55 am
கர்னூல் ஊரின் அருகே, ஒரு சிறிய மணற் குன்றின்மேல் மிகப் பெரிய ஆஞ்சநேயர்கோயில் உள்ளது. தொலைவிலிருந்தே அந்த ஆஞ்சநேயரின் திருவுருவத்தைக் காணக் கூடிய அளவிற்குப் பெரியதொரு சிற்பமாக அமைத்திருந்தனர். ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கிக் கொண்டு பாதயாத்திரைத் தொடர்ந்தோம்.
8.10க்கு தேசிய நெடுஞ்சாலை யில் காலை உணவு.
9.55 am
10.04 am
நேற்று நெடுஞ்சாலை யிலிருந்து உளிண்டகொண்டா ஊருக்கு பிரியும் பாதையைச் சரியாகக் கவனிக்காது யாத்திரிகர் பலரும் பாதைமாறி, நெடுஞ்சாலையிலேயே பயணம் செய்து மீண்டு ஊருக்குள் வந்து சேர்ந்தனர். நேற்றுப்போல் இன்றும் நடந்துவிடக்கூடாது என்று, யாத்திரிகர் அனைவரும் ஒன்றாகவே கர்னூல் சாலைகளில் பாதை மாறிடாமல் பயணம் செய்தனர்.
அன்னதான வண்டியின் கேபிள் சீர் செய்யப்பட்டது.
கர்னூல் பைபாஸ் வழியாக சந்தோஷ் நகர் 10.00க்கு வந்து சேர்ந்தோம்.
புனித காசி யாத்திரையில் 50ஆவது நாளான இன்று கர்னூல் சுவாமி விவேகானந்தா பள்ளியில் தங்கியிருந்தோம்.
இன்று பாதயாத்திரையின் 50ஆவது நாள் என்பதால் யாத்திரிகர் அனைவரும் சேர்ந்து நின்று படம் எடுத்துக் கொண்டோம். இந்தப் படத்தை அண்ணன் காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்கள் அவரது கேமிராவில் எடுத்தார். அதனால் இந்தப் படத்தில் அண்ணன் காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்கள் இடம்பெறவில்லை.
ஓய்வு.
தங்கல்.
https://goo.gl/maps/B2qpzx1ngfEGZczR8
இன்றைய பயணம் சுமார் 24 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக