வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,
நேற்று முன்தினம் சதாசிவநகரில் உள்ள “ஸ்ரீ வாணி வித்யாலயம்” வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.
நேற்று முழுதும் ஓய்வு.
இன்று 67ஆம் நாள் - ஆடி 15 (31.07.2014) வியாழக் கிழமை.
அதிகாலை 2.10 மணிக்கு யாத்திரைக்குத் தயார் ஆனோம். வழக்கம்போல் காலை வழிபாடு முடித்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு நடக்கத் தொடங்கினோம்.
அதிகாலை மணி 5.34 அளவில் சாலையோரம் இருந்த காளி கோயிலைக் கண்டு வணங்கிக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
(கோயில் இருப்பிடம் https://goo.gl/maps/RdvuiNYqjni6Ht1dA)
காலை 7.50 அளவில் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றோம்.
காலை 9.30 மணிக்கு டிச்பள்ளி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.
நான்குவழிச்சாலை அமைக்கப்படுவதற்கு முன்பு, இந்தக் கோயிலில் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்குமாம். இந்தக் கோயிலைக் கடந்து செல்லும் அனைத்து வாகனங்களும் இங்கே நின்று செல்லுமாம். இப்போது ஒருவழிச் சாலையாக ஆகிவிட்டபடியால், கோயிலுக்கு என வருபவர்கள்கூட நெடுந்தொலைவு சுற்றி வரவேண்டியுள்ளது. எனவே இருசக்கர வாகனங்களில் வருவபர்கள் மட்டுமே கோயிலுக்கு வந்து செல்கின்றனராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக