வியாழன், 23 ஜூலை, 2020

எரியோடு பெயர்க்காரணம், எரியோடு ஊரும் பேரும்

எரியோடு பெயர்க்காரணம்
எரியோடு ஊரும் பேரும் 

ஈரோடு என்றால், ஈரமான ஓடு (சிவபெருமானின் கையில் உள்ள கபாலம்) என்ற பொருளும் சொல்லுகின்றனர்.  ஈரோட்டில் உள்ள சிவலிங்கத்தின் பெயர் ‘ஆர்த்ர கபாலீச்வரர்’ என்பதாகும்.  “ஆர்த்ரகபாலம்” என்றால் “ஈர ஓடு”.
இதனால் ஈரோடு என்பது சிவபெருமானின் கையில் உள்ள ஈரமான கபாலத்தைக் குறிக்கும் என்கின்றனர்.

ஈரோடு என்பது போன்று,  சித்தோடு, பேரோடு, வெள்ளோடு, பச்சோடு, எரியோடு முதலான பெயர்கள் உள்ள ஊர்களும் உள்ளன.
ஈரோடு = ஈர் + ஓடு
சித்தோடு = சிற்று + ஓடு
பேரோடு = பெரிய + ஓடு
வெள்ளோடு = வெள்ளை + ஓடு 
எரியோடு = எரி + ஓடு 
அந்தந்த ஊர்களின் பூமியின் மேற்பரப்பு எப்படி எதனால் அமைந்துள்ளது என்ற விளக்கத்தை உள்ளடக்கிய காரணப் பெயர்களா இருக்கலாம்.



மேற்கண்ட படத்தில் எரிகற்கள் விழுந்த இடங்களாக நான் கருதும் இடங்களை வட்டமிட்டுக் காட்டி யிருந்தேன்.  இதில் வேடசந்தூருக்குக் கிழக்கே எரிகல் என்ற ஊருக்கு அருகில் விண்கல் விழுந்திருக்க வேண்டும் என வட்டமிட்டுச் சுட்டிக்காட்டி இருந்தேன்.
அறுபடைவீடு பாதயாத்திரை  சென்ற போது 06.05.2016 வெள்ளிக்கிழமை யன்று வேடசந்தூரிலிருந்து புறப்பட்டு எரியோடு என்ற ஊர் வழியாக ஐயலூருக்கு (அய்யலூர்) நடந்துசென்றோம்.  

அப்போது எரியோடு என்ற இந்த ஊரில் எரிகல்லின் ஓடு விழுந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளனவா? என்ற அடிப்படையில் தேடிப்பார்த்தேன்.  
எனது தேடலில் எரியோடு ஊரில் உள்ள பெருமாள் கோயில் அருகே மிகப்பெரிய பாறைஒன்று தென்பட்டது.  இந்தப் பாறை நாம் சாதாரணமாகக் காணும் பாறை போன்று இல்லாமல் மாறுபட்டுள்ளது.





விண்கல் எரிந்து விழுந்து பெரும் வட்டவடிவிலான மேட்டுப் பகுதியை உருவாக்கியுள்ளது.  எரிகல் விழுந்த போது அதிலிருந்து பெயர்ந்த எரிகல் ஓடுமட்டும் தனித்து இந்த இடத்தில் விழுந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.  
புவியியல் வல்லுனர்கள் இந்த இடத்தில் உள்ள பாறையை இதற்கு முன் ஆராய்ந்துள்ளார்களா? என எனக்குத் தெரிவில்லை.  அறிவியல் அடிப்படையில் இந்தப் பாறையை புவியியல் வல்லுனர்கள் ஆராய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
எரியோடு ஊரில் உள்ள பெருமாள்கோயிலின் அருகே உள்ள பாறையானது ஒரு விண்கல்லாக இருக்க வேண்டும்.

எரியோடு என்ற இடம் எரிகல்ஓடு விழுந்த இடமாக இருக்கக் கூடும்,  ஓடு விழுந்ததனால் அங்கே பள்ளம் ஏதும் ஏற்படவில்லை.
அருகில் கடவூர் இடையபட்டி உள்ள வட்டவடிமான மலைப்பள்ளத்தாக்குப்பகுதியே எரிகல் விழுந்த இடமாக இருக்கக்கூடும், 
எரிகல் விழுந்த காரணத்தினால்தான் அது ஒரு வட்டவடிமான பள்ளத்தாக்காக உள்ளது.  பின்னர் உண்டான கடல்வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட sedimentsஆல் பள்ளத்தாக்கு மூடப்பெற்றுள்ளது,  கடல்வெள்ளம் வடிந்து வெளியேறிய வழித்தடங்கள் இப்போது கணவாய்களாக (பாதைகளாக) மாறியுள்ளன என்பது எனது கருத்து.

புவியியல் படித்த அறிஞர்களின் கருத்துக்களை அன்புடன் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்
திருவிளையாடற் பராணம் ஆய்வாளர்,
திருப்பூவணப் புராணம் முனைவர் பட்ட ஆய்வாளர்,
திருவாப்புடையார் புராணம் ஆய்வாளர்,


...............................................

வாசிக்கப் பட்டவை...


(1)
திருவாலவாய்க் காண்டம்
நாற்பத் தொன்பதாவது திருவாலவாயான படலம்

“தேனிழி குதலைத் தீஞ்சொற் சேனெடுங் கண்ணி கோயில்
வானிழி விமானம் பொற்றா மரைவிளை யாட்டின் வந்த
கானிழி யிடபக் குன்றங் கரிவரை நாகக் குன்றம்
ஆனிழி வரைவ ராக வரைமுத லழிவி லாத“

(2) 
திருவிளையாடற் புராணம்
பாம்பு எல்லைகாட்டிய படலம் பாடல் எண் 2340 

“நுண்ணிய பொருளினு நுண்ணி தாயவர்
விண்ணிழி விமானநின் றெழுந்து மீனவன்
திண்ணிய வன்பினுக் கெளிய சித்தராய்ப்
புண்ணிய அருட்கடல் ஆகிப் போதுவார்“



4. திருப்புகலியும் திருவீழிமிழலையும்291
________________________________

ஏகபெ ருந்தகை யாயபெம்மா

னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்

மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை

விண்ணிழி கோயில் விரும்பியதே. 4

38. சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்

தையலொ டுந்தள ராதவாய்மைப்

புந்தியி னான்மறை யோர்களேத்தும்

புகலி நிலாவிய புண்ணியனே

எந்தமை யாளுடை யீசவெம்மா

னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்

வெந்தவெண் ணீறணிவார்மிழலை

விண்ணிழி கோயில் விரும்பியதே. 5

--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக