ஆறுபடைவீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆறுபடைவீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஜூன், 2020

16.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 9ஆம் நாள், ஆனி 2

அறுபடைவீடு பாதயாத்திரை 
60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று 9ஆம் நாள் - ஆனி 2 (16.06.2017) வெள்ளிக் கிழமை.

குருஜி பச்சைக்காவடி அவர்களது அறுபடைவீடு பாதயாத்திரை குழுவினர் 16.06.2017 இன்று வலையன்குளத்தில் இருந்து புறப்பட்டு கல்குறிச்சி வந்து சேர்ந்தோம் .
காரியாபட்டி ஊர் எல்லையில் தேநீர் .
காரியாபட்டியை அடுத்து வக்கனாங்குண்டு ஊர் எல்லையில் மரத்தடியில் காலை உணவு .



கல்குறிச்சி நாடார் உறவின்முறை கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தோம் .
ஓய்வு.  ஆளுக்கொரு மின்விசிறியின் கீழ் நன்கு வசதியாகப் படுத்து ஓய்வெடுத்தனர்.  சிலர் அவரவர் துணிகளைத் துவைத்து உலர்த்தி மடித்து எடுத்து வைத்துக் கொண்டனர்.

மதிய உணவு.


மாலைநேரத்தில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டு முடித்தவுடன் யாத்திரிகர்கள் ஒன்றாக உட்கார்ந்து தத்துவ விசாரணைகளில் ஈடுபட்டனர்.

இரவு உணவு .
ஓய்வு .


மறுநாள் அதிகாலை 3.00 மணிக்கு வழிபாடு செய்துகொண்டு, ஹார்லிக்ஸ் மற்றும் ரொட்டி சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.


https://goo.gl/maps/VjU8WX6p3B4NA8CD9
இன்றைய பயணம் சுமார் ....24 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 12 ஜூன், 2020

13.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 6ஆம் நாள் , வைகாசி 30

அறுபடைவீடு பாதயாத்திரை  - 6ஆம் நாள் 
வைகாசி 30 (13.06.2017) செவ்வாய்க் கிழமை

இன்று காலை மணி 4:45 க்கு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அருகே உள்ள நகரத்தார் விடுதியில் இருந்து புறப்பட்டு மணி 7:05 அளவில் திருப்பரங்குன்றம் நகரத்தார் விடுதியை அடைந்தோம்.




நடந்து வரும்போது திப்பரங்குன்றம் மலையையும், இடும்பன் மலையையும் கண்டவுன் வணங்கிக் கொண்டோம்.




தடாதகை, தடாதகைப் பிராட்டியார்

அதன்பின் திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சென்று உச்சிகால வழிபாடு செய்து கொண்டோம்.   வடக்குப் பார்த்த குடவரைக்கோயிலில் மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.  1) நேர்கிழக்கே உள்ள பெருமாளைப் பார்த்தபடி சிவலிங்கம். 2) மேற்கேயுள்ள சிவலிங்கத்தைப் பார்த்தபடி பெருமாள்.
சிவலிங்கத்திற்கும் பெருமாளுக்கும் இடையே வடக்குப் பார்த்தபடி 3) நாரதர் தேவசேனையுடன் முருகன் 4) துர்க்கை 5) பிள்ளையார்.   அதாவது கோயிலின் வெளியே நின்று கும்பிட்டால் நேர் எதிரே துர்க்கை இருக்கும்.   துர்க்கை நடுவில் இருக்க, துர்க்கைக்கு வலதுபுறம் முருகனும் பெருமாளும் உள்ளனர்.  துர்க்கையின் இடதுபுறம் பிள்ளையாரும் சத்தியகிரீஸ்வரரும் (சிவலிங்கமும்) உள்ளனர். 

மதுரையில் உள்ள நகரத்தார் சிலரும், திருப்பரங்குன்றம் அருகில் வசிக்கும் நகரத்தார் சிலரும் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.

அறுபடைவீடு பாதயாத்திரை

https://goo.gl/maps/aE1kANeLFGKUxrFD8
இன்றைய பயணம் சுமார் 8 கி.மீ.

காலை உணவு.

மண்டபம் நன்கு காற்றோட்டமாக இருந்தது.  தண்ணீர் வசதியும் நன்றாக இருந்தது.   யாத்திரிகர் பலரும் அவரவர் ஆடைகளைத் துவைத்து உலர்த்தி மடித்து வைத்துக் கொண்டனர்.  

மண்டபத்தின் உள்ளே சமையக்கட்டை யடுத்தாற்போல் மரகதவிநாயகர் கோயில் உள்ளது.  யாத்திரிகர் அனைவரும் மரகதவிநாயகரை வணங்கி வழிபட்டனர்.

மதிய உணவு.
ஓய்வு.
மாலைநேர வழிபாடு, ரொட்டியும் தேநீரும்.
இரவு உணவு.
ஓய்வு.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,

அன்பன் 
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 10 மே, 2020

22, 23, 24.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை


22.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை


Kalairajan Krishnan
10 மே, 2017, பிற்பகல் 8:53 · Karaikkudi, தமிழ்நாடு ·

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தலைமையில் அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம்.  பழமுதிர்சோலை  திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி சுவாமிமலை ஆகிய ஐந்து தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு திருத்தணிகை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.

வைகாசி 9,10,11 ஆகிய மூன்று நாட்களில் நடந்த பயணக் குறிப்புகள் -
துன்முகி வைகாசி – 9 (22.05.2016) ஞாயிற்றுக் கிழமை









இன்று காலை 02.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு 25 கி.மீ. நடந்து 09.00 மணிக்கு தைலாபுரம் ஸ்ரீ தனலெட்சுமி திருமண மண்டபத்தை அடைந்து அங்கு தங்கினோம்.

வழியில் பஞ்சவடி கோயில் எதிரே தங்கி ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.

இந்த மண்டபத்தை காசிஸ்ரீ தொப்பை என்ற கலியபெருமாள் அவர்களின் தம்பி திரு. நடராசனும், திரு.தொப்பை அவர்களின் மகன் திரு. சசிகுமார் அவர்களும் சேர்ந்து ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

மாலை 04.00 மணிக்கு யாத்திரிகர்கள் சிலர் புறப்பட்டுச் சென்ற தைலாபுரம் அருள்மிகு தையல்நாயகி உடனாய மருந்தீசுவரர் கோயிலுக்கும், அதே வளாகத்தில் உள்ள அருள்மிகு லெட்சுமி நாராயணப்பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்து திரும்பினர்.

இங்கு பழைமையான நந்தி இருப்பதைக் கண்டு, சுயம்புலிங்கம் எங்கே என்று கேட்டேன். கோயில் மிகவும் சிதிலமடைந்து கிடந்த போது, சுயம்புலிங்கத்திற்குக் கூரைக் கொட்டகை போட்டு இருந்தனராம். ஒருநாள் ஏற்பட்ட தீ விபத்தில் சிவலிங்கமும் எரிந்து போனது என்றார் கோயில் பூசாரி. கோயிலில் வைத்தியம் தொடர்பான யந்திரங்களைக் கருங்கற்களில் எழுதிப் பதித்து வைத்துள்ளனர்.

துன்முகி வைகாசி – 10 (23.05.2016) திங்கள் கிழமை
இன்று காலை 03.00 மணிக்கு தைலாபுரத்தில் இருந்து புறப்பட்டு 20 கி.மீ. நடந்து திண்டிவனம் அரிகிருஷ்ணன் கல்யாண மண்டபத்தை காலை 07.45 மணிக்கு அடைந்து அங்கு தங்கினோம்.






வழியில் திண்டிவனம் எல்லையில் சிறிதுநேரம் தங்கி ரொட்டியும் தேநீரும சாப்பிட்டோம்.  இந்த மண்டபத்தை தேவகோட்டை உயர்திரு. இராம. திண்ணப்பன் செட்டியார் அவர்களின் பங்காளி திரு.என்.நடேசன் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். மண்டப வாடகையை அவரே கொடுத்துவிட்டார். மேலும் யாத்திரிகர்களுக்குத் தேவையான தண்ணீர் சமையல்வாயு காய்கறி முதலானவற்றையும் கொடுத்து உபசரித்தார்.

துன்முகி வைகாசி – 11 (24.05.2016) செவ்வாய்க் கிழமை

இன்று காலை 02.15 மணிக்கு திண்டிவனத்தில் இருந்து புறப்பட்டு 29 கி.மீ. நடந்து அச்சிறுபாக்கம் ஆதிபராசக்தி பள்ளிக்கூடத்தைக் காலை 09.15 மணிக்கு அடைந்து தங்கினோம்.

வழியில் அருள்மிகு ஸ்ரீ சுந்தரபுரீசுவரர் திருக்கோயில் வாயிலில் சிறிது நேரம் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம். அங்கிருந்து புறப்பட்டு தொழுபேடு என்ற இடத்தில் காலை உணவு சாப்பிட்டோம்.
தங்கும் இடத்தையும் காலை உணவையும் காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களின் நண்பர் தவத்திரு. சிவபெருமான் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.
மிகக் கடுமையான வெயில். தங்கியிருந்த இடம் சற்று வசதிக் குறைவாக இருந்தது. எனவே மாலை 04.45 மணிக்குப் புறப்பட்டு 5 கி.மீ. நடந்து மேல்மருவத்தூர் வழியாக சோத்துப்பாக்கம் NVM திருமண மண்டபத்தை அடைந்து தங்கினோம்.












இந்த மண்டபத்தை காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் அச்சிறுபாக்கம் சிவ.ராசேசுவரி அவர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,
அன்பன் காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

சனி, 26 ஜனவரி, 2019

01.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, வலையன்குளம் பெருமாள் கோயில்

வலையன்குளம் பெருமாள் கோயில்


எல்லாச் சமூகத்தாரும் ஒன்றாய் வணங்கும் கோயில்.
திருவிழாவின் தொடர்ச்சியாக 60 நாட்களுக்கும் மேலாக தினமும் நாடகம் நடத்தி வழிபடும் கோயில்.
கோயில் வளாகத்திற்குள் யாரும் காலணி அணிந்து செல்லக் கூடாது எனக் கிராமத்தினரால் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ள கோயில்.
பெண்கள் கோயில் வாலிலேயே நின்று வழிபடும் கோயில்.

மூலவரோ சுயம்பு.
பெயரோ பெருமாள் கோயில்.
விபூதி பிரசாதம்.
வில்வம் தீர்த்தம்.
தேவியர் இல்லாத மூலவர்.
பரிவார தெய்வங்கள் ஏதும் இல்லாத கோயில்.

ஊரார் ஒன்று சேர்ந்து நடத்தும் அன்னதானம்.
உயிர்பலி இல்லாத வழிபாடு.

மதுரை விமானநிலையம் அருகில் உள்ளது வலையங்குளம் அருள்மிகு பெருமாள் கோயில்.

சாதியின் பெயரால் சண்டைகளை வளர்க்கும் பகுத்தறிவாளர்களும்,  கடவுளை நம்பும் காட்டுமிராண்டிகளும் அவசியம் வழிபடவேண்டிய கோயில்.

அறுபடைவீடு பாதயாத்திரை, பிள்ளையார்பட்டியிலிருந்து பாதயாத்திரை புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களிலும் வழிபாடு செய்து கொண்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் 01.07.2017 அன்று இங்கே உள்ள சமுதாயக்கூடத்தில் தங்கியிருந்து கோயில்வழிபாடு செய்து கொண்டோம்.

வலையங்குளம் திரு.மாரியப்பன் செட்டியார் அவர்களும், நகைக்கடை வைத்திருக்கும் நகரத்தார் அன்பர் ஒருவரும் அடியார்களை  அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 10 ஜனவரி, 2019

28.05.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, அரக்கோணம், குமார ராஜா மஹால்

அரக்கோணம் குமார ராஜா மஹால்








காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் அவரது 20 பாதயாத்திரிகர்களும் அறுபடைவீடு பாதயாத்திரை மேற்கொண்டனர்.  பிள்ளையார்பட்டியில் இருந்து  பாதயாத்திரை புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை முதலான ஐந்து திருத்தலங்களிலும் வழிபாடு செய்து முடித்தனர்.  சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில் 28.05.2017 இன்று  இந்த மண்டபத்தில் தங்கிச் சென்றனர். 
உள்ளூர் இந்துமுன்னனியினர் பலரும் வந்து யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தனர்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 3 ஜனவரி, 2019

12.05.2016, அறுபடைவீடு பாதயாத்திரை, திருவையாறு

அறுபடைவீடு பாதயாத்திரை, திருவையாறு

சி.நா.சத்திரம்
மற்றும் திருமணமண்டபம்.


அறுபடைவீடு பாதயாத்திரையின் போது 12.05.2016 அன்று காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் அவருடன் 20 யாத்திரிகர்களும் இங்கு தங்கிச் சென்றனர். சத்திரம் சார்பாக யாத்திரிகர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பெற்றது.











அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்