வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 12ஆவது வருட இராமேசுவரம் காசி பாதயாத்திரை.
இன்று 21.08.2015
யாத்திரிகர்கள் சமோகரா என்ற ஊரில் உள்ள அருள்மிகு கிருஷ்ணர் கோயிலில் தங்கி இருந்தோம்.
அங்கிருந்த நதியில் யாத்திரிகர் அனைவரும் நீராடி மகிழ்ந்தனர்.
கிராமத்தினர் பலரும் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.
கிருஷ்ணர் கோயிலுக்கு அருகே, வயலில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர். அங்கே ஒரு கிணறும் அதன் அருகே ஒரு மரத்தடியில் பீடத்தில் வழிபாடும் செய்து வருகின்றனர்.
அந்தப் பீடத்தில், பார்வதி பரமேசுவரர் ஒன்றாக இருக்கும் சிற்பமும், அருகே நந்தி சிற்பமும் ஒன்றும் சிதைந்த நிலையில் உள்ளன. இந்த இடத்தில் முன்பு ஒரு பழமையான சிவாலயம் இருந்திருக்க வேண்டும்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக