முகநூலில் நண்பர் Anbudan Balaji · 14.08.2021 காலை மணி 10.00
அவர்களின் பதிவு இது.
தண்டவாளத்தில் நடந்த தண்டபாணி
நன்றி மறவாமை மஹாபெரியவாளின் சிறப்பு
காசி யாத்திரை செல்ல வேண்டிய சம்பிரதாயங்களைச் செய்து முடித்துவிட்டு,1918 மார்ச் மாதம் ,முறையான யாத்திரையைத் தொடங்கினார்கள் பெரியவா.
இருப்பத்தோரு ஆண்டுகள் புனிதப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திவிட்டு 1939 ஆம் ஆண்டு தமிழ்நாடு திரும்பினார்கள் ஸ்வாமிகள்.
காசியிலிருந்து கொண்டுவந்த கங்கா தீர்த்தத்தால் ராமேஸ்வரம் ராம நாதஸ்வாமியை அபிஷேகம் செய்து வைத்தால்தான் அந்த யாத்திரை நிறைவேறும்.
மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் அடைய பாம்பன் கால்வாயை கடக்க வேண்டும். அப்போது பாம்பன் மேல் செல்ல பேருந்து பாலம்கிடையாது. ரயில்வே பாலம் வழியாக நடந்து செல்ல உரிய உயர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும். குப்புஸ்வாமி என்பவரை தென்னிந்திய ரயில்வே தலைமை ஸ்தானமாக விளங்கிய திருச்சிக்கு அனுப்பினார்கள்.
இம்பீரியல் வங்கி அதிகாரி நாராயணஸ்வாமியும் ரயில்வே ஏஜண்டைச் சந்தித்து மடத்தின் சார்பில் ஓர் விண்ணப்பம் கொடுத்தார். இவர் பெரியவாளிடம் அபார பக்தி பூண்டவர். பூஜைப் பெட்டிகளை எடுத்துச் செல்ல தனி ட்ராலி தேவை, பாம்பன் ரயில் பாலத்தின் மீது நடந்து செல்ல அனுமதி
தேவை.....இவைதான் மனுவில் இடம் பெற்றிருந்தன.
இரண்டு தினம் சென்று ரயில்வே அதிகாரியிடமிருந்து பதில் வந்தது.
ஒரு நாற்காலி சுத்தம் செய்யப்பட்டு நான்கு சீடர்களுடன் பூஜைப் பெட்டி பயணம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாகவும், ஸ்வாமிகளும் பத்து சீடர்களும் ரயில்வே பாலத்தின் வழியாக நடந்து செல்ல வசதியாக பலகைகள் பொருத்தித் தரப்படும்என்றும் அதில் கண்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் காலை ஒன்பது மணிக்கு மண்டபம் ரயில் நிலையம் வந்து , பத்தரை மணிக்குள் கடந்து சென்றுவிட வேண்டுமென அதில் கண்டிருந்தது.
திட்டமிட்டபடி அக்கரை சேர்ந்த ஸ்வாமிகளுக்கும் சீடர்களுக்கும் ஓர் அதிசயம்!
தலைமை போக்குவரத்து அதிகாரியான ஆங்கிலேயர் பழத் தட்டுடன் ஸ்வாமிகளை வரவேற்று சமர்ப்பித்தார்.
''எல்லாம் சௌகர்யமாகவும் சரியாகவும் நடந்ததா'' என ஆங்கிலத்தில் வினவினார்! அவருக்கு நன்றி சொல்லும்படி குப்புஸ்வாமி ஐயரைப் பணித்தார்கள்.
இப்படி சங்கல்பித்தப் புனிதப் பயணம் வெற்றிகரமாக நிறைவேறியதும், ஸ்வாமிகள் குப்புஸ்வாமி அவர்களிடம் இரண்டு பட்டுத்துணிகளும், பழ வகைகளும் கொடுத்து, ''இந்தப் ப்ரசாதங்களை மண்டபம் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் திருச்சி அதிகாரிக்கும் கொடுத்துவிட்டுவா'' என்றார்கள்.
நன்றி மறவாமை என்பது பெரியவாளின் ஓர் அங்கம்!
பெரியவாளைப் பற்றி பேசுவதற்கு கூட அவரோட அனுக்ரஹம் இருக்க வேண்டும்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
காலடி சங்கர காஞ்சி சங்கர
காமாஷி சங்கர காமகோடி சங்கர
சதாசிவ சங்கர சந்திரசேகர சங்கர
மதுரகாளிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக